தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Job Opportunities : வங்கி வேலை தேடுபவரா? இதோ 4,045 காலியிடங்களுக்கான அறிவிப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்க 21ம் தேதி கடைசி!

Job Opportunities : வங்கி வேலை தேடுபவரா? இதோ 4,045 காலியிடங்களுக்கான அறிவிப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்க 21ம் தேதி கடைசி!

Priyadarshini R HT Tamil
Jul 18, 2023 09:24 AM IST

Job Opportunities : பல்வேறு வங்கிகளில் கிளர்க் வேலைக்கான காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 4,045 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க 21ம் தேதி கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

நிறுவனத்தின் பெயர் – இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பர்சனல் செலக்ஷன் 

வேலை வகை – மத்திய அரசின் வங்கி பணிகள் 

பணி வகை – வழக்கமான பணி 

பணியின் பெயர் – கிளர்க் 

காலியிடங்கள் – 4,045 

பணியிடங்கள் – தமிழகம் மற்றும் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் 

விண்ணப்பிக்க கடைசி நாள் – 21.07.2023 

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன் 

அலுவல் இணைய முகவரி – https://www.ibps.in 

 கல்வித்தகுதி – ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் வாயிலாக டிகிரி முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தகுதி இருக்க வேண்டும். விண்ணப்பதாரரிடம் முறையான மதிப்பெண் சான்றுகள், டிகிரி சான்றிதழ்கள் இருக்க வேண்டும். சரியான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

கம்ப்யூட்டர் – விண்ணப்பதாரர் கம்ப்யூட்டரில் சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் பயற்சி கட்டாயம் வேண்டும். மேலும் விண்ணப்பதாரருக்க பிராந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்று நன்றாக எழுதப்படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்.  

வயது – 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். 02.07.1995க்கு முன் பிறந்தவராக இருக்கக்கூடாது. 01.07.2003க்கு பின் பிறந்தவராக இருக்கக்கூடாது. பட்டியவின மக்களுக்கு 5 ஆண்டுகள் வயதில் விலக்கு அளிக்கப்படும். 3 ஆண்டுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 10 ஆண்டுகள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 15 ஆண்டுகள் மாற்றுத்திறன் பட்டியல் இனத்தவருக்கும், 13 ஆண்டுகள் மாற்றுத்திறன் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் வயதில் தளர்வுகள் அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் விதம் 

முதல்நிலை தேர்வு

முக்கிய தேர்வு என இரண்டு ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும்.

தமிழகத்தில் தேர்வு நடைபெறும் மொழிகள் 

தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி 

தமிழகத்தில் தேர்வு நடைபெறும் இடங்கள் 

சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோயில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் தேர்வுகள் நடைபெறும். 

முக்கிய தேர்வு மையங்கள் – சென்னை, மதுரை, விருதுநகர்.

விண்ணப்பக்கட்டணம் – ரூ.850 மட்டும் 

பட்டியலினத்தவர்/மாற்றுத்திறனாளிகளுக்கு – ரூ.175 மட்டும்   

ஆகஸ்டில் அழைப்பு கடிதங்களை டவுண்லோட் செய்யலாம். 

தேர்வு தேதி – ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் 2023 

பணி துவக்கம் – எப்ரல் 2024 

https://ibpsonline.ibps.in/crpcl13jun23/ என்ற லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்