தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Job Alert :மத்திய அரசு மற்றும் என்எல்சியில் என்ன வேலை உள்ளது - விவரங்கள் உள்ளே…

Job Alert :மத்திய அரசு மற்றும் என்எல்சியில் என்ன வேலை உள்ளது - விவரங்கள் உள்ளே…

Priyadarshini R HT Tamil
Apr 14, 2023 01:35 PM IST

Job Opportunities : மத்திய அரசு மற்றும் என்எல்சியில் என்னென்ன வேலைகள் உள்ளன என்ற விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

காலியிடம்: இன்டஸ்ட்ரியல் டிரைய்னி (பைனான்ஸ் பிரிவில் 56 இடங்கள் உள்ளன) 

கல்வித்தகுதி : சி.ஏ., சி.எம்.ஏ. படிப்பு முடித்திருக்கவேண்டும். 

வயது : 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. 

தேர்ச்சிமுறை : கல்வித்தகுதி, மதிப்பெண். ஸ்டைபண்ட் : மாதம் ரூ.22,000. விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : Recruitment cell / HR Department / Corporate Office

block-1, Neyveli - 607 801, Cuddalore District.

கடைசிநாள்: 22.4.2023 விவரங்களுக்கு : www.nlcindia.in 

மத்திய அரசில் வேலை

மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : ரிசர்ச் ஆபிசர் (நேச்ரோபதி 1, யோகா 1), உதவி இயக்குநர் 17, அரசுவழக்கறிஞர் 48, ஜூனியர் இன்ஜினியர் (சிவில் 58, எலக்ட்ரிக்கல் 201, அசிஸ்டென்ட் ஆர்க்கிடெக்ட் 1) என மொத்தம் 146 இடங்கள்உள்ளன.

கல்வித்தகுதி: ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு டிப்ளமோ, மற்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் படிப்பு முடித்திருக்க வேண்டும். 

வயது : உதவி இயக்குநர் 40, ஜூனியர்இன்ஜினியர் 30, மற்ற பதவிகளுக்கு 35 வயதுக்குள்இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சிமுறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும்முறை : ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ.25, பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம்இல்லை. கடைசிநாள் : 27.4.2023. விவரங்களுக்கு : www.upsc.gov.in  

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான்டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்