தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Job Alert : திருச்சி என்.ஐ.டி.யில் பேராசிரியர் பணி! மல்டி டாஸ்கிங், நர்சிங் பணி – மூன்று வேலைவாய்ப்பு தகவல்கள் உள்ளே!

Job Alert : திருச்சி என்.ஐ.டி.யில் பேராசிரியர் பணி! மல்டி டாஸ்கிங், நர்சிங் பணி – மூன்று வேலைவாய்ப்பு தகவல்கள் உள்ளே!

Priyadarshini R HT Tamil
Jun 25, 2023 01:31 PM IST

Job Opportunities : நர்சிங், பேராசிரியர் உள்ளிட்ட மூன்று வேலைவாய்ப்பு தகவல்கள் உள்ளே உள்ளன.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

04.07.2023 அன்றைய தேதிப்படி 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. கேட், நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் போன்று தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.07.2023.

ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து உரிய ஆவணங்களின் நகல்களை கையொப்பமிட்டு "பதிவாளர், தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி-620015 என்று முகவரிக்கு வரும் 11.07.2023 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்,

விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான நடைமுறைகளையும், தேர்வு செய்யப்படும் விதம் குறித்த தகவல் களையும் https://recruitment.nitt.edu/faculty2023/ என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

சென்னை தரமணியில் இயங்கும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.ஓ.டி.டி.ஆர்) மூலம் 34 மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 17.07.2023 அன்றைய தேதிப்படி 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 17.07.2023. ஆன்லைனில் விண்ணப்பித்த படிவத்தை டவுன்லோடு செய்து உரிய ஆவணங்களின் நகல்களை சுய கையொப்பமிட்டு,

இயக்குனர், தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 600 113 என்ற முகவரிக்கு 31.07.2023க்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விரிவான விவரங்களுக்கு https://www.nittrc.ac.in/  என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

நர்சிங் பணி

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) மூலம் சிகிச்சை உதவியாளர் பணிக்கு, ஆண் (36), பெண் (31) என 67 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். நர்சிங் தெரபி பற்றிய டிப்ளமோ கல்வி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

10, 12ம் வகுப்பு, டிப்ளமோ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை www.mrb.tn.gov.in என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி – 19.07.2023.

IPL_Entry_Point

டாபிக்ஸ்