தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  உங்க மாமியார் ஊருக்கு பஸ் விடுங்க! அமைச்சரை கோர்த்துவிட்ட ஜவாஹிருல்லா!

உங்க மாமியார் ஊருக்கு பஸ் விடுங்க! அமைச்சரை கோர்த்துவிட்ட ஜவாஹிருல்லா!

Kathiravan V HT Tamil
Apr 11, 2023 11:39 AM IST

பேராசியர் ஜவாஹிருல்லாவின் அருகில் அமர்ந்திருந்த வேல்முருகன் அமைச்சர் சிவசங்கரை பார்த்து ‘மாமியார் வூட்டுவுள்ள விடமாட்டாங்க’ என கலாய்த்தார்

ஜவாஹிருல்லா, பாபநாசம் எம்.எல்.ஏ - எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத்துறை அமைச்சர்
ஜவாஹிருல்லா, பாபநாசம் எம்.எல்.ஏ - எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத்துறை அமைச்சர்

ட்ரெண்டிங் செய்திகள்

போக்குவரத்து துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் அரியலூர், அமைச்சரின் இல்லத்தரசியின் சொந்த ஊர் பாபநாசம். பாபநாசம் மக்கள் நீண்டகாலமாக அரியலூருக்கு நேரடி பேருந்து வசதி வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். தற்போது 3 பேருந்துகள் மாறிதான் அரியலூருக்கு செல்ல வேண்டி உள்ளது.

அரசியலூர் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கும், புனித காளிகாம்பாள் கோயிலுக்கும், அரியலூரில் உள்ள பல்லவன், வைகை தொடர்வண்டி நிலையம் செல்லவும் பாபநாசத்தில் இருந்து தினமும் பலர் அரியலூருக்கு செல்கின்றனர். எனவே பாபநாசத்தில் இருந்து அரியலூருக்கு நேரடி பேருந்து வசதி செய்ய அமைச்சர் முன்வருவாரா? என கேள்வி எழுப்பினார்.

அப்போது பேராசியர் ஜவாஹிருல்லாவின் அருகில் அமர்ந்திருந்த வேல்முருகன் அமைச்சர் சிவசங்கரை பார்த்து ‘மாமியார் வூட்டுவுள்ள விடமாட்டாங்க’ என கலாய்த்தார்

பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏவின் கேள்விக்கு பதிலளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், உறுப்பினர் அவர்கள் பேராசிரியர், கேள்வியை எப்படி போட்டால் பதிலை எப்படி பெறலாம் என்று எனது இல்லத்தரசியை கோர்த்துவிட்டு என் பதிலை வாங்க நினைக்கிறார்.

தற்போது அரியலூரில் இருந்து திருவையாறு வழியாக தஞ்சாவூர் சென்றுதான் பாபநாசம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

நேரடியாக திருவையாறு-கபிஸ்தலம் வழியாக செல்ல வேண்டும் என்பது பேராசிரியரின் கோரிக்கை. ஏற்கெனவே நானும் பேராசிரியரும் நீர்வளத்துறை அமைச்சரிடம் அரியலூர்-பாநாசத்தை இணைக்கும் வகையில் பாலம் கட்ட கோரிக்கை வைத்துள்ளோம். அது அமைத்தால் பேருந்து இயக்க வசதியாக இருக்கும். பேருந்து வழித்தடம் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்