Seeman Vs Varunkumar IPS: சாதிகள் இல்லையடி பாப்பா! நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு வருண் குமார் ஐபிஎஸ் பதிலடி!
Seeman Vs Varunkumar IPS: ”சாதிய வன்மத்துடன் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் செயல்பட்டு வருவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி இருந்த நிலையில், பாரதியார் கவிதையை சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ளார்”

திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் ஐபிஎஸ் சாதிரீதியாக செயல்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ள நிலையில், பாரதியார் கவிதையை சுட்டிக்காட்டில் பதிலடி கொடுத்து உள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர்.
சீமான் குற்றச்சாட்டு
இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள வருண் ஐபிஎஸை குற்றம்சாட்டி இருந்தார். அதில் “ஒரு அதிகாரியை எஸ்.பியாக வைத்துள்ளீர்கள் வருண்ணு, அவரு எங்கள் ஊரை சேர்ந்தவர். தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். தேவர், நாடார், கோனார், தேவேந்திரர்கள் என யாரையுமே அவருக்கு பிடிக்கவில்லை. எங்கள் மீது பிறப்பு வெறுப்பு அவருக்கு உள்ளது. ஏற்கெனவே துரைமுருகனை சென்னைக்கு வர சொல்லி குண்டாஸில் போட்டது வருண் ஐபிஎஸ்தான். இப்போதும் சாட்டை துரைமுருகனை கைது செய்து திருச்சிக்கு கொண்டு வருவதும் வருண் ஐபிஎஸ்தான். இதையெல்லாம் மறந்துவிடுவோமா?. சர்வேசனும், நீங்களும் ஐபிஎஸ் படிக்கும்போது ஒரே பேட்ஜ் மெட்டாக இருந்தீர்கள். ரத்தீஷ் அவருடைய தம்பியாக உள்ளார். மேலிட அழுத்தம் என்று கூறுகிறீர்கள். எத்தனை நாட்களுக்கு நீங்கள் மேலிடத்தில் இருப்பீர்கள். தேவர், நாடார்,கோனார் என தொடர்ந்து வன்மத்துடன் உள்ளர். என்னை ஏன் கைது செய்யவில்லை. ” என சீமான் கூறி இருந்தார்.