தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ashwini: அமைச்சர்.. அதிகாரிகள் பெயரில் மிரட்டலா.. யார் இந்த அஸ்வினி!

Ashwini: அமைச்சர்.. அதிகாரிகள் பெயரில் மிரட்டலா.. யார் இந்த அஸ்வினி!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 17, 2023 12:16 PM IST

திருக்கழுக்குன்றம் மேஜிஸ்திரேட் கதிரவன் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வினியை வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் அஸ்வினியை சிறையில் அடைத்தனர்.

யார் இந்த அஸ்வினி
யார் இந்த அஸ்வினி

ட்ரெண்டிங் செய்திகள்

இதை அடுத்து அஸ்வினியின் கோரிக்கையை ஏற்று பூஞ்சேரி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று உணவருந்தினார். மேலும் அவரது கோரிக்கைகளை நிறைவேற்றினார். இதனால் அவர் மிகவும் பிரபலமடைந்தார்.

இதற்கிடையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோயில் பகுதியில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த விஜி என்பவரது மனைவி நதியா கடை அமைப்பு வந்துள்ளார். இந்நிலையில் கடை அமைப்பதில் அஸ்வினிக்கும் நதியாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அஸ்வினி தனது கையில் இருந்த கத்தியை எடுத்து நதியாவை வலது தோள்பட்டை மற்றும் வயிற்று பகுதியில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நதியாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நதியாவிற்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பூஞ்சேரி பகுதியில் இருந்த அஸ்வினியை கைது செய்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அஸ்வினியை திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆசை படுத்தினர். திருக்கழுக்குன்றம் மேஜிஸ்திரேட் கதிரவன் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வினியை வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் அஸ்வினியை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தொடர்ச்சியாக அதிகாரிகளை பெயரில் தங்களை மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்