தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /   Impact Of Northeast Monsoon Will End Tomorrow

Northeast Monsoon: நாளையுடன் முடிவடையும் வடகிழக்கு பருவமழை!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 11, 2023 01:49 PM IST

வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் நாளையுடன் நிறைவடைவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பான மழை அளவு 44.3 செ.மீ இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு சற்று அதிகமாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை டிசம்பர் 31ஆம் தேதி உடன் முடிவடைந்தாலும் தென் மாநிலங்களின் அதன் தாக்கமானது தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வடகிழக்கு பருவ மழையானது நாளை ஜனவரி 12 முதல் நிறைவு பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அந்த செய்திக் குறிப்பில் அவர்," தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் மற்றும் அதை ஒட்டிய ஆந்திரா கர்நாடக மாநிலத்தின் தெற்கு உள்பகுதிகள் கேரளப் பகுதிகளில் நாளை ஜனவரி 12 வடகிழக்கு பருவமழை விளக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.

தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு இடங்களில் அதிகாலை வேளையில் இன்று லேசான பனிமூட்டம் இருக்க அதிக வாய்ப்புள்ளது. உள்ளே இருக்கும் மாவட்டங்களில் வெப்பநிலை குறைந்தபட்ச இயல்பை விட இரண்டு அல்லது மூன்று டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் மலைப்பகுதிகளில் இரவு நேரத்தில் ஓரிரு இடங்களில் உறைபனி உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. சென்னை மாவட்டம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இன்று காணப்படும்" எனத் தெரிவித்துள்ளார்

IPL_Entry_Point

டாபிக்ஸ்