தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  I Din't Got Money From Some To Help Others, Says Kpy Bala In Palani

Palani: யாரிடமும் பணமோ, பொருளோ பெற்று சேவை செய்யவில்லை - கலக்கபோவது யாரு புகழ் பாலா பளிச்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 01, 2024 11:01 PM IST

பழனியில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் மறைந்த சினிமா நடிகர் மற்றும் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு புகழ் பாலா
தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு புகழ் பாலா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிகழ்ச்சியில் பாலா பேசியதாவது: "சேவை மனப்பான்மையுடன் நான் என்னுடைய பொருளாதாரத்தில் இருந்து மட்டுமே மற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். யாரிடமும் பணமோ, பொருளோ பெற்றுக்கொண்டு சேவை செய்யவில்லை. மேலும் மற்றவர்களின் தேவை அறிந்தே தேவைப்படும் உதவியை, சேவையாக செய்கிறேன்" என்றார்.

இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மறைந்த சினிமா நடிகர் மற்றும் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்துக்கு பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினது. இது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.

இந்த நிகழ்வில் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமையில் ஹரி ஹரிமுத்து, விமல் குமார், அசோக்குமார் சுப்பிரமணி, மாசிலாமணி காளியப்பன் திருப்பதி, பாரதி கண்ணன், கவிஞர் வைர பாரதி, மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் தாளாளர் கார்த்திகேயன் நன்றி தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்