தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ht Holiday Tips : கோடையில் குளு குளு பயணம்! சென்னை சுற்றுலா போறவங்களுக்கு என்ன வசதின்னு பாருங்க!

HT Holiday Tips : கோடையில் குளு குளு பயணம்! சென்னை சுற்றுலா போறவங்களுக்கு என்ன வசதின்னு பாருங்க!

Priyadarshini R HT Tamil
May 09, 2023 10:57 AM IST

HT Tour Tips : கோடை விடுமுறையையொட்டி, அடையார் - மாமல்லபுரம் இடையே மீண்டும் ஏ.சி. பஸ் இயக்கப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

கோடை விடுமுறை என்பதால் தற்போது மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

சென்னை - மாமல்லபுரம் இடையே, முட்டுக்காடு சுற்றுலா வளர்ச்சிக்கழக படகு குழாம், வடநெம்மேலி முதலைப்பண்ணை, திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில், கோவளம் நீலக்கொடி கடற்கரை போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன.

சென்னை புறநகர் மற்றும் மாநகர பகுதியினர் வெயில் தாக்கத்தின்போது வார இறுதி நாட்களில் சென்னை பிராட்வே, கோயம்பேடு, தியாகராய நகர் ஆகிய பகுதிகளிலிருந்து மாமல்லபுரத்திற்கு வர 10 ஆண்டுகளுக்கு முன் மாநகர் ஏ.சி பஸ் (குளிர்சாதன பஸ்) இயக்கப்பட்டன. ஆனால் நாளடைவில் அவை பழுதானதால், சீரமைக்கப்படாமல் அந்த பஸ் சேவைகள் அனைத்தும் ரத்தாகியது.

தற்போது கோடை காலத்தில் கடும்வெயில் சுட்டெரிக்கும் நிலையில் சாதாரண பஸ்சில் மக்கள் பயணம் செய்து அவதிப்பட்டு வந்தனர். மாமல்லபுரம் சுற்றுலா முக்கியத்துவம் கருதி இந்த பகுதிக்கு சென்னையிலிருந்து ஏ.சி. பஸ் இயக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வார இறுதி நாட்களில் பள்ளி மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் மாமல்லபுரத்தில் குவிந்து வருகின்றனர்.

எனவே கோடை வெயிலில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு இதமான, குளு, குளு சூழலில் மக்கள் பயணம் செய்ய வேண்டும் என எண்ணிய சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் தற்போது அடையாறில் இருந்து மாமல்லபுரத்திற்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மாநகர ஏ.சி. பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் சுற்றுலா வரும் சென்னை வாழ் மக்கள் மற்றும் மற்ற மாவட்டத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்