தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  H.raja Case: எச்.ராசா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

H.Raja Case: எச்.ராசா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 29, 2023 11:18 AM IST

தற்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 11 வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எச்.ராஜா
எச்.ராஜா

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2018ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் குடும்பங்களை மிகவும் தரக்குறைவாக பேசியதாக கூறி நாகர் கோயில், வேடசந்தூர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்று தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டதற்காகவும் திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவான கருத்துகளை வெளியிட்டதாகவும் அவர் மீது 11 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது எச்.ராஜா தரப்பில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. எம்.பி கனி மொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்துதான் அதில் அவர் புகார் அளிக்காத நிலையில் 3ம் நபர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக வாதம் முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து இதுபோல் எச்.ராஜா பேசியது முதல் முறை அல்ல. தொடர்ச்சியாக இதுபோன்று பேசி வருகிறார். இனிமேல் இதுபோல் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று நீதிபதி வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 11 வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்