தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Madurai High Court : கோயில்கள் தவிர அனுமதி இல்லாத இடங்களில் கால்நடை வெட்ட தடை

Madurai High Court : கோயில்கள் தவிர அனுமதி இல்லாத இடங்களில் கால்நடை வெட்ட தடை

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 10, 2023 12:56 PM IST

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல், எந்த ஒரு நபரும், எந்த இடத்திலும் கால்நடைகள், செம்மறி, ஆடு, பன்றி, ஆகியவற்றை வெட்ட அனுமதிக்கக்கூடாது.

 உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம்
உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம்

ட்ரெண்டிங் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம் . தோவாளை அருகே உள்ள மாதவலயம் பகுதியில் மாட்டிறைச்சி கடையை வேறு இடத்திற்கு மாற்ற உரிய உத்தரவிட கோரி

மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் 3 வாரங்களுக்கு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மாதவலயம் பகுதியை சேர்ந்தவர் சையத் அலி பாத்திமா. இவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் நான் மாதவலயம் கிராமத்தில் வசிக்கிறேன். எனது வீட்டின் அருகே அனுமதியின்றி மாட்டிறைச்சி கடை நடத்தப்படுகிறது. இந்த மாட்டிறைச்சி கடையால் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இந்த மாட்டிறைச்சி கடையை வேறு இடத்திற்கு மாற்ற உரிய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது கிராம பஞ்சாயத்து தரப்பில், மாட்டிறைச்சி கடை வைத்திருப்பவர் ஒரு கோழி இறைச்சி கடை நடத்துவதற்கு மட்டுமே உரிமம் பெற்று உள்ளார். ஆனால் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடை நடத்துகிறார் என வாதிட்டார்.

இதை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல், எந்த ஒரு நபரும், எந்த இடத்திலும் கால்நடைகள், செம்மறி, ஆடு, பன்றி, ஆகியவற்றை வெட்ட அனுமதிக்கக்கூடாது. கோவில் திருவிழாக்களை தவிர்த்து, கிராமப் பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சிக் கூடம் தவிர வேறு இடங்களில் கால்நடைகளை வெட்டுவது குற்றம். மேலும், இந்த வழக்கில் உள்ளாட்சி அமைப்பின் உரிய உரிமம் பெறாமல், மாட்டிறைச்சி கடை நடத்தி வருவதாக உள்ளாட்சி தரப்பு வழக்கறிஞர் கூறி உள்ளார்.

எனவே , உரிமம் பெறாமல் மாட்டிறைச்சி கடை நடத்துவது குறித்து, தோவாவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் 3 வாரங்களுக்கு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்