தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update : என்ன இன்னும் அதிகரிக்குமா?கவனமா இருங்க மக்களே.. வாட்டி வதைக்கும் வெயில்.. எச்சரிக்கும் வானிலை மையம்!

Weather Update : என்ன இன்னும் அதிகரிக்குமா?கவனமா இருங்க மக்களே.. வாட்டி வதைக்கும் வெயில்.. எச்சரிக்கும் வானிலை மையம்!

Divya Sekar HT Tamil
Apr 18, 2023 10:59 AM IST

தமிழகத்தில் இன்று வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில்
வெயில்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல மாவட்டங்களில் தற்போதே 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் பதிவாகியுள்ளது. ஈரோடு, திருப்பத்தூர் நகரங்களில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சுட்டெரிக்கும் இந்த வெயிலால், நாள்தோறும் பணிக்கு செல்வோர் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். பகல் நேரத்தில் வெப்பநிலை இயல்பை விட மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ள சூழலில், அடுத்து வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் படி ஏப்ரல் 19 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதன்படி இன்று மற்றும் நாளை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதன் காரணமாக, வருகிற 20 மற்றும் 21ம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் இருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச

வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்