தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Government School Girls Developed Software For Azadi Sat-2 Satellite

Madurai: ஆசாதி சாட்-2 செயற்கைக்கோளுக்கு மென்பொருள் தயாரித்த அரசு பள்ளி மாணவிகள்

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 09, 2023 12:18 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மட்டுமே பங்கு பெறுகின்றனர். இதற்காக அவர்களுக்கு வருகிற பத்தாம் தேதி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுவதை காண்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசாதி 2 தயாரிப்பில் பங்கேற்ற மாணவிகள் தங்கள் ஆசிரியர்களுடன்
ஆசாதி 2 தயாரிப்பில் பங்கேற்ற மாணவிகள் தங்கள் ஆசிரியர்களுடன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் எஸ்.எஸ்.எல்.வி-01 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது. ஆனால் எதிர்பாராத விதிமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவில்லை. இதையடுத்து இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. 2 ரக ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது. இதில் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கிலோமீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது. இதனுடைய இறுதிகட்ட பணியான கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

உற்சாகத்தில் மாணவிகள்
உற்சாகத்தில் மாணவிகள்

இந்த நிலையில் ஆசாதி சாட் செயறlkகை கோளுக்கான மென்பொருள் தயாரிப்பில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஈடுபட்டு இதற்காக கடந்த முறை இஸ்ரோ சென்று வந்த நிலையில் தற்போது ஆசாதி சாட் 2 செயற்கைகோளுக்கான மென்பொருள் தயாரிக்கும் முயற்சியில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு அரசு பள்ளியைச் சேர்ந்த 10 மாணவிகள் தலைமை ஆசிரியர் கர்ணன், அறிவியலாசிரியர் சிந்தியா முயற்சியோடு வெற்றிகரமாக 50 கிராம் எடையுள்ளஆசாதிசாட் 2 செயற்கைக்கோளுக்கான ஆர்டினோ ஐஇடி என்ற மென்பொருளை தயாரித்து இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் வருகிற 10-ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திலிருந்து விண்ணில் எஸ்எஸ்எல்வி ராக்கெட் உடன் ஆசாத்தி சாட் 2 செயற்கைக்கோளும் இணைத்து அனுப்பப்படுகிறது இந்தியாவில் உள்ள 75 பள்ளி மாணவிகள் இந்த செயற்கைக்கோளுக்கான மென்பொருளை தயாரித்துள்ளனர். இதில் தமிழகத்திலிருந்து இரண்டு பள்ளிகள் மட்டுமே பங்கேற்றனர்.

அதில் சென்னையில் உள்ள தனியார் பள்ளியும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மட்டுமே பங்கு பெறுகின்றனர். இதற்காக அவர்களுக்கு வருகிற பத்தாம் தேதி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுவதை காண்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலைத் தொடர்ந்து பள்ளி மாணவியர்களை ஆசிரியர்களும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர். இதுகுறித்து கருத்து தெரிவித்த மாணவிகள், “ விண்ணில் செலுத்தப்படும் ஆசாதி சாட்- 2 செயற்கைக்கோளுக்காக மென்பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இஸ்ரோவிற்கு முதன்முறையாக செல்வது சந்தோசத்தை கொடுக்கிறது. இந்தியாவில் உள்ள 75 பள்ளிகளில் தங்களது பள்ளியும் தேர்வானது மேலும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று மாணவிகள் இஸ்ரோவிற்கு சென்றுள்ளனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்