தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Free Training : மாணவர்களுக்கு இலவச பயிற்சியா? எவ்வளவு இருக்கு பாருங்க…

Free Training : மாணவர்களுக்கு இலவச பயிற்சியா? எவ்வளவு இருக்கு பாருங்க…

Priyadarshini R HT Tamil
Jan 31, 2023 11:39 AM IST

பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற மற்றும் மத்திய அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

 எபதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு திறன்அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது பன்னாட்டு நிறுவனங்களில்எளிதில் வேலைவாய்ப்பு பெற Aspiring Minds Computer Adaptive Test AMCAT) பயிற்சியினைவழங்கி வருகிறது. 

இப்பயிற்சியைப்பெற அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில்இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் பட்டியலின மாணவர்கள் இப்பயிற்சியில்சேர விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு மூன்றுமாதம். இப்பயிற்சிக்கான அனைத்து செலவும் தாட்கோவால்வழங்கப்படும். 

பயிற்சியை முடித்தவுடன், AMCAT தேர்வுக்குஅனுமதிக்கப்படுவார்கள். தேர்வில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு AMCAT சான்றிதழும் வழங்கப்படும். இதன் மூலம் பன்னாட்டுநிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம். தாட்கோ இணையதளமான www.tahdco.com என்றஇணையதளத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மத்தியஅரசின் பணியாளர் தேர்வாணையம் (STAFF SELECTION COMMISSION) மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு (MTS and Havaldar Examination) 18.01.2023 அன்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவேலை நாடும் இளைஞர்கள் www.ssc.nic.in என்றஇணையதளத்தின் மூலம் பிப்ரவரி மாதம் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு 13  வட்டார மொழிகளிலும் (தமிழிலும்) நடைபெறவுள்ளது. இப்போட்டித் தேர்விற்கு நேரடி இலவச பயிற்சி வகுப்புதிருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் பிப்ரவரி 7ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது. 

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள, திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வேலை தேடுவோர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901 & 94990-55902 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்புகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்