தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore: உதவி தொகை வாங்கித் தருவதாக மாணவர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி; 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

Coimbatore: உதவி தொகை வாங்கித் தருவதாக மாணவர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி; 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 04, 2023 09:59 AM IST

5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவர்களுக்கு வழங்கப்பட்டது.

5 பேர் கைது
5 பேர் கைது

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை, திருப்பூர், ஈரோடு , சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவ மாணவிகளின் செல்போன் எண்ணை தெரிந்து வைத்துக் கொண்டு “ஸ்காலர்ஷிப்' வழங்கும் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக ஆசை வார்த்தை கூறினர். மேலும தங்களுக்கு கல்வி உதவி தொகை வந்து இருப்பதாகவும் , ஒரு குறிப்பிட்ட பணத்தை நீங்கள் அனுப்பினால் நாங்கள் கல்வி உதவித் தொகையை உங்கள் வங்கி கணக்கில் அனுப்பி விடுவோம் என்று கூறினார்கள்.

இதை நம்பிய ஏராளமான ஏழை எளிள மாணவ மாணவிகள் பணத்தை அனுப்பி வைத்தனர். ஒரு கட்டத்தில் இது மிகப் பெரிய மோசடி என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து நாமக்கல் மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்த டேவிட் (வயது 32 ) லாரன்ஸ் ராஜ் ( வயது 28) ஜேம்ஸ் (வயது 30) எட்வின் சகாயராஜ் (வயது 31)மாணிக்கம் (வயது 34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் டெல்லியில் தங்கி இருந்து அங்குள்ள மோசடி கும்பலுடன் தொடர்பு வைத்து இந்த நூதன மோசடியை நடத்தினர் என்ற அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இந்நிலையில் 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்