தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sexual Assault: ரயில்வே ஸ்டேஷனில் இளம்பெண்ணை தூக்கிய கும்பல்!

Sexual Assault: ரயில்வே ஸ்டேஷனில் இளம்பெண்ணை தூக்கிய கும்பல்!

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 05, 2023 02:03 PM IST

செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து பெண்ணை கடத்திச் சென்று நான்கு பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை
கூட்டுப் பாலியல் வன்கொடுமை

ட்ரெண்டிங் செய்திகள்

அதேசமயம் இந்த சம்பவம் குறிப்பு காவல் கட்டுப்பாட்டு வரைக்கும் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிந்த சாலவாக்கம் காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்தப் பெண்," செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை செல்வதற்காக நான் காத்திருந்தேன் அப்போது திடீரென்று வந்த நான்கு பேர் என்னை மிரட்டி வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றனர். பின்னர் அவர்கள் சேர்ந்து என்னைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து தப்பிச் சென்று விட்டனர்" எனத் தெரிவித்தார்.

பின்னர் காவல் துறையினர் அந்த இளம் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண்ணிடம் விசாரணை செய்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார். இதனால் காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை குற்றம் நடந்ததா? என முடிவுக்கு வர முடியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

அதேசமயம் இந்த இளம் பெண்ணும் மலையூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். நேற்று இரவு அவர்கள் செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து மாம்பாக்கம் பகுதிக்குத் தனியாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இளம் பெண் தனது நண்பர் உள்ளிட்ட நான்கு பேர் பாலியல் வன்கொடுமைச் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது இது தொடர்ந்து சாலவாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு ரயில் நிலையம் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். தற்போதைய இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்," சென்னைக்குச் செல்வதற்காகச் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த இளம் பெண் நான்கு பேர் கொண்ட கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

ரயில் நிலையத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரம் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இது குறித்துத் தெளிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பாலியல் வன்கொடுமை செய்தால் மிகக் குறைந்த காலத்தில் கடுமையாகத் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு இல்லாத காரணத்தினால் இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவாகத் தீர்ப்பு வழங்க வேண்டும்.

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். ஆள் நடமட்டும் குறைவாக உள்ள பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்