தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji: அடுத்த ஆண்டு ஆஸ்கர் செந்தில் பாலாஜிக்கு தான் - ஜெயக்குமார்

Senthil Balaji: அடுத்த ஆண்டு ஆஸ்கர் செந்தில் பாலாஜிக்கு தான் - ஜெயக்குமார்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 15, 2023 12:17 PM IST

அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது செந்தில் பாலாஜிக்குத் தான் கிடைக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து விசாரணை செய்த நீதிபதி, அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இது குறித்து பல்வேறு தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவர் கூறுகையில், உலகத்திலேயே 30 விழுக்காடு அடைப்புக்கு ஆஞ்சியோகிராம் செய்தது இங்கு மட்டும்தான். கட்டாயம் இன்று தவறு செய்தவர்கள் நாளை தண்டிக்கப்படுவார்கள்.

அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என்றால் அதனைக் கட்டாயம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தான் கொடுக்க வேண்டும். போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது அவர் மீது புகார் வந்தவுடன், அவரை அமைச்சரவையில் இருந்து ஜெயலலிதா அவர்கள் நீக்கினார்.

செந்தில் பாலாஜியின் பெயரில் குற்றச்சாட்டு இருந்த நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழகு பார்த்தார். ரிமாண்டில் சிறையில் வைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.

ஒருவேளை செந்தில் பாலாஜி நிரபராதியாக இருந்தால் சட்டத்தின் முன்பு அவர் நிரூபிக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு ஏன் இப்படி கபட நாடகம் ஆடுகிறார்" என திருப்பினதுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜிக்குப் புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது விசாரணை கைதிக்கான பதிவேடு எண் புழல் சிறையில் இருந்து கொடுக்கப்பட்டது.

சிறைக் கைதிகளுக்கு உள்ள விதிமுறைகள் அனைத்தும் செந்தில் பாலாஜிக்குப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியைப் பார்க்க வேண்டும் என்றால் சிறை அலுவலர்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே மற்றவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். தன்னை ரிமைண்ட் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்