தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vk Pandian: 'மதுரை மறத் தமிழனையும், தமிழ் பண்பாட்டையும் கேலி செய்வதா!’ பாஜகவை விளாசும் ஜெயக்குமார்

VK Pandian: 'மதுரை மறத் தமிழனையும், தமிழ் பண்பாட்டையும் கேலி செய்வதா!’ பாஜகவை விளாசும் ஜெயக்குமார்

Kathiravan V HT Tamil
Jun 03, 2024 10:50 AM IST

தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் ஒருவர் வாழை இலையில் உணவருந்துவதை போலவும் அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் ஒரு தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டுள்ளது. வி.கே.பாண்டியன் அவர்களை போன்ற ஒருவர் வேட்டி-சட்டை அணிந்து இருப்பதாக அனைத்து விளம்பரங்களிலும் பாஜக சித்தரித்துள்ளது.

’ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக‌! வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?’ ஜெயக்குமார் சரமாரி கேள்வி!
’ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக‌! வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?’ ஜெயக்குமார் சரமாரி கேள்வி!

ட்ரெண்டிங் செய்திகள்

"தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு"

இது தொடர்பாக தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் வி.கே.பாண்டியனை கேலி செய்து வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தை ஜெயக்குமார் பகிர்ந்துள்ளார். இதனை சுட்டிக்காட்டி அவர் இட்டுள்ள பதிவில், "தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை நாம் உணர்ந்தவர்கள்! அறிந்தவர்கள்!

ஒரு தமிழன்‌ ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்று விடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பாஜக ஏவியது!

கேலி செய்யும் பாஜகவின் தேர்தல் விளம்பரம்

தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ் இனத்தை இழிவுபடுத்தி பார்க்க வேண்டும் நோக்கத்தில் தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் ஒருவர் வாழை இலையில் உணவருந்துவதை போலவும் அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் ஒரு தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டுள்ளது.

வி.கே.பாண்டியன் அவர்களை போன்ற ஒருவர் வேட்டி-சட்டை அணிந்து இருப்பதாக அனைத்து விளம்பரங்களிலும் பாஜக சித்தரித்துள்ளது. உலகிற்கே நல்வழியையும் பாரம்பரியத்தையும் கற்று கொடுத்த முதல் இனம் தமிழினம்!

வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்திலும் அறிவியலிலும் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள்! என்பது பாஜகவிற்கு தெரிய வாய்ப்பில்லை.

ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது.

எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக‌..எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?

இரத்தம் கிடைக்க உறுதுணையாக நின்றவர்

கடந்த ஆண்டு இதே நாளில் இதே வி.கே.பாண்டியன் தான் ஒடிசா ரயில் விபத்தின் போது படுகாயமடைந்து இருந்த தமிழர்களுக்கு தேவையான இரத்தமும் உரிய சிகிச்சையும் உடனடியாக கிடைப்பதற்கு உறுதுணையாக நின்றவர்.

மதுரை மறத்தமிழன் அறத்தின் வழி வெல்வார்

தான் பிறந்த மண்ணிற்கும் இருக்கும் மண்ணிற்கும் உள்ள மக்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைக்கு நேரில் சென்று அறிவுறுத்தியவர்.

ஒரு மனிதனை இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக தான் பாஜக பார்க்கிறது.

மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் அறத்தின் வழி நின்று வென்று காட்டுவார்! என தெரிவித்து உள்ளார்.

யார் இந்த வி.கே.பாண்டியன்?

ஒடிசா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த வி.கே.பாண்டியன், அம்மாநில முதலமைச்சரும் பிஜு ஜனதாதளம் கட்சி தலைவருமான நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரியவர் ஆவார். அவரது தனிச்செயலாளராக இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிஜு ஜனதாதளம் கட்சியில் வி.கே.பாண்டியன் இணைந்தார். தற்போது ஒடிசா அரசின் 5டி என்ற அரசு திட்டத்தின் தலைவராக வி.கே.பாண்டியன் இருந்து வருகிறார்.

வி.கே.பாண்டியனை விமர்சிக்கும் பாஜக

ஒடிசாவில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து சட்டமன்றத் தேர்தலும் நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும், வி.கே.பாண்டியன் குறித்து விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். 

ஒடிசாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலத்தில் "சில அதிகாரிகள்" ஆட்சி நடைபெற்று வருவதாகவும், பாஜகவுக்கு வாக்களித்தால், ஒடிசா மண்ணை சேர்ந்த ஆற்றல் மிக்க, கடின உழைப்பாளி ஒருவரை முதலமைச்சராக ஆக்குவோம் என கூறினார். “மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால், மண்ணின் மைந்தன், உத்கல பூமியை ஆள்வான்; தமிழ் பாபு அல்ல” என்று ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் உதவியாளரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான வி.கே.பாண்டியனை மறைமுகமாக சாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

டி20 உலகக் கோப்பை 2024