Naveen Patnaik: வி.கே.பாண்டியன் என்னை கட்டுப்படுத்துகிறாரா? பாஜகவுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பதிலடி!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Naveen Patnaik: வி.கே.பாண்டியன் என்னை கட்டுப்படுத்துகிறாரா? பாஜகவுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பதிலடி!

Naveen Patnaik: வி.கே.பாண்டியன் என்னை கட்டுப்படுத்துகிறாரா? பாஜகவுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பதிலடி!

Kathiravan V HT Tamil
May 28, 2024 08:41 PM IST

அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் இட்டுள்ள பதிவில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன், நவீன் பட்நாயக்கை சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும், பிஜூ ஜனதா தளம் கட்சித் தலைவரின் கை அசைவுகளைக் கூட கட்டுப்படுத்துவதாகவும் கூறி இருந்தார்.

Naveen Patnaik: வி.கே.பாண்டியன் என்னை கட்டுப்படுத்துகிறாரா? பாஜகவுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பதிலடி!
Naveen Patnaik: வி.கே.பாண்டியன் என்னை கட்டுப்படுத்துகிறாரா? பாஜகவுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பதிலடி! (PTI)

நவீன் பட்நாயக் பதிலடி

வி.கே.பாண்டியனால் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கட்டுப்படுத்தப்படுவதாக, அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியதற்கு பதில் அளித்த அவர், பாரதிய ஜனதா கட்சி "பிரச்சினைகள் அல்லாதவற்றை" எழுப்புவதில் பெயர் பெற்றது. "பிரச்சினைகள் அல்லாதவற்றை பிரச்சினைகளாக மாற்றும் பாஜக என் கைகளை விவாதிக்கிறது என்று நான் நம்புகிறேன். இது நிச்சயமாக வேலை செய்யாது" என்று நவீன் பட்நாயக் கூறியதாக PTI செய்தி நிறுவனம் கூறி உள்ளது. 

ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்வீட்

கூட்டம் ஒன்றில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உரையாற்றும் வீடியோவை அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பகிர்ந்து இருந்தார், அதில் மேடையில் பேசும் போது நடுங்கி கொண்டிருந்த நவீன் பட்நாயக்கின் கையை வி.கே.பாண்டியன் நகர்த்தி வைக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. 

இதனை குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்த அவர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன், நவீன் பட்நாயக்கை சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும், பிஜூ ஜனதா தளம் கட்சித் தலைவரின் கை அசைவுகளைக் கூட கட்டுப்படுத்துவதாகவும், ஒடிசா  மாநிலத்தின் எதிர்காலம் குறித்து தான் கவலைப்படுவதாக கூறினார். 

“இது மிகவும் வேதனையளிக்கும் காணொளி. ஸ்ரீ நவீன் பாபுவின் கை அசைவுகளைக் கூட ஸ்ரீ வி.கே. பாண்டியன் ஜி கட்டுப்படுத்துகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரி ஒருவர் ஒடிசாவின் எதிர்காலம் குறித்து தற்போது கடைப்பிடிக்கும் கட்டுப்பாட்டை நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது!” என ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார். 

ஒடிசா மக்களின் ஆட்சியை மீண்டும் அம்மாநில மக்களுக்கு வழங்க பாஜக உறுதியாக உள்ளதாகவும் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார். 

இதற்கிடையில், வி.கே.பாண்டியன் பாஜகவை கடுமையாக சாடி உள்ளார். பாஜகவின் செயல்பாடுகள் பிஜூ ஜனதாதளம் கட்சிக்கு உதவும் என்றும், தொடர்ந்து ஆறாவது முறையாக பிஜூ ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

வி.கே.பாண்டியனை சாடிய அமித் ஷா

“ஒடிசா மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, மாமன்னர் அசோகருக்கு எதிராக வீரத்துடன் போராடினார்கள். ஆனால் இன்று நவீன்பாபு ஒரு தமிழ் முதலமைச்சரை மக்கள் மீது திணிக்க முயற்சிக்கிறார். மக்கள் நவீன் பாபுவை சகித்துக் கொண்டார்கள் ஆனால் உங்கள் பெயரில் இந்த தமிழ் பாபுவை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என அவர் கூறினார்.

திரை மறைவில் இருந்து ஆட்சி நடத்த திட்டம்

திரைமறைவில் இருந்து ஆட்சியை நடத்த ஒரு தமிழ் பாபுவை அனுமதிக்க தயாரா? என்று கேள்வி எழுப்பிய அவர், பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரு மக்கள் சேவையாளர் ஆட்சியை நடத்துவார் என்று அவர் கூறினார்.

ராமர் கோயில் உற்சவத்தில் கலந்து கொள்ள ஒடிசா மக்களை பாண்டியன் தடுத்து நிறுத்தியதாக ஷா குற்றம் சாட்டிய அவர், “பகவான் ஜெகநாதருக்கு அவமரியாதை செய்வதை மக்கள் பொறுத்துக் கொள்வார்களா என்று கேள்வி எழுப்பினார்.

ஒடிசா மாநிலத்தில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் கட்நத மே 13 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.