தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Flight Tickets Hike: ரம்ஜான் விடுமுறை எதிரொலி.. சர்ரென உயர்ந்த விமான டிக்கெட் - தூத்துக்குடிக்கு எவ்வளவு தெரியுமா?

Flight Tickets Hike: ரம்ஜான் விடுமுறை எதிரொலி.. சர்ரென உயர்ந்த விமான டிக்கெட் - தூத்துக்குடிக்கு எவ்வளவு தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Apr 22, 2023 10:54 AM IST

ரம்ஜான் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கான விமான டிக்கெட் மூன்று மடங்கு அதிகரித்திருப்பது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விமான கட்டணம் உயர்வு
விமான கட்டணம் உயர்வு

ட்ரெண்டிங் செய்திகள்

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் கோடை விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை ஆகியவையும் ஒரே நேரத்தில் வந்துள்ளது. ஏற்கனவே சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், ரயில்களில் முன்பதிவு முழுவதும் முடிந்துவிட்டன. 

கடைசி நேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். இதனால் தற்போது வழக்கத்தை விட சென்னை விமான நிலையத்திற்கு வரும் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விமான கட்டணமும் அதிகரித்துள்ளது.

சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமானங்களிலும் கட்டணம் பெருமளவு அதிகரித்துள்ளன. அதேபோல டெல்லி, கொல்கத்தா செல்லும் விமானங்களிலும் கட்டணம் உயர்ந்துள்ளது. சொந்த ஊர்களில் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், கட்டண உயர்வை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் விமானங்களில் ஏராளமானோர் பயணம் செய்தனர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வழக்கமான கட்டணம் ரூ.3,675. ஆனால், இன்று ரூ.11,000-14,000 வரை உள்ளது. சென்னை-மதுரை கட்டணம் ரூ.3,419 என்பது ரூ.10,000 முதல் 13,000 எனவும், சென்னை-திருச்சிக்கு ரூ.2,769 என்பது ரூ.9,000- 13,000 வரை எனவும் அதிகரித்துள்ளது. சென்னை-கோவைக்கு சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.3,313 என்பது ரூ.5,500-11,000 வரை எனவும் உள்ளது. 

அதே போல சென்னை-டெல்லிக்கு ரூ.4,973 என்பது நேற்று ரூ.8500-10,000 எனவும், சென்னை-கொல்கத்தாவுக்கு ரூ.5,309 என்பது நேற்று ரூ.9,000-15,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விமான கட்டணம் பெருமளவு அதிகரித்த போதிலும், விமானங்களில் சீட்கள் மிக குறைவாகவே உள்ளன. எனவே பயணிகள் போட்டி போட்டு கொண்டு, முன்பதிவு செய்து பயணிக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point