தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Female It Worker Crushed To Death By Building Collapse In Chennai

IT Worker Death : நசுங்கிய ஐடி பெண் - காரணமான அனைவரும் கைது!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 30, 2023 12:34 PM IST

பழைய கட்டிடத்தை இடிக்கும் பொழுது சுவர் இடிந்து விழுந்து ஐடி-யில் பணிபுரியும் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நசுங்கிய ஐடி பெண்
நசுங்கிய ஐடி பெண்

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது ஒரு பகுதியிலிருந்த கட்டட சுவர் இடிந்து அண்ணா சாலை ஓரமாக விழுந்தது. அப்போது சாலை வரும் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த பெண்களை மீட்பதற்குத் தகவல் அறிந்து தீயணைப்பு படை வீரர் விரைந்து வந்துள்ளனர்.

பின்னர் இடுப்பாடுகள் சிக்கி இருந்த இரண்டு பெண்களையும் 20 நிமிட போராட்டத்திற்குப் பின்பு மீட்டனர். படுகாயம் அடைந்த இரண்டு பெண்களையும் மீட்டு உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போது அப்போது மருத்துவர்கள் இதில் ஒரு பெண் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்," விபத்தில் உயிரிழந்த பெண் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பிரியா என்பது தெரிய வந்துள்ளது. இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சேர்ந்தவர் என்பதும், சென்னையில் உள்ள விடுதிகள் தங்கி பணியாற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது.

பழைய கட்டடங்களை இடிக்கும் போது முறையான பாதுகாப்பு முன் ஏற்பாடுகளைப் பின்பற்றாததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகக் கட்டிடம் இடிக்கும் பணியில் உடனடியாக நிறுத்த வேண்டுமெனச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சி விதித்துள்ள எந்த விதிமுறைகளையும் கட்டளை இடுப்பின்போது கடைப்பிடிக்கவில்லை என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஜேசிபி உரிமையாளர் ஞானசேகர், ஓட்டுநர் பாலாஜி, மேற்பார்வையாளர் பிரபு ஆகிய மூன்று பேரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கைது செய்துள்ளனர்.

அதே சமயம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் மற்றும் மாநகராட்சி விதிகளைப் பின்பற்றாமல் கட்டடத்தை இழுத்து பெண் உயிர் இழக்கக் காரணமாக இருந்த ஒப்பந்ததாரர் அப்துல் ரஹ்மானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கட்டட உரிமையாளர் சையது அலி பாத்திமா தலைமறைவாக இருப்பதால் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்