தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  M.s.swaminathan Dead: இந்திய பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

M.S.Swaminathan Dead: இந்திய பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 28, 2023 12:18 PM IST

இந்தியா பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன்

எம்.எஸ்.சுவாமிநாதான்
எம்.எஸ்.சுவாமிநாதான்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய வேளாண் துறையில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவரான விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இன்று வயது மூப்பு காரணமாக சென்னையில் காலை 11.20 மணியளவில் காலமானார். இதை அவரது குடும்ப உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கடந்த 1925 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பிறந்த எம் எஸ் சுவாமிநாதன் அங்கு பள்ளி படிப்பை முடித்தார். பல கல்லூரிகள் உயர் கல்வி பயின்றார். அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை பெற்றார். இந்திய பசுமைப் புரட்சிக்கு முன் நின்று உழைத்தவர்களில் எம் எஸ் சுவாமிநாதன் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் ஆவார். வேளாண் துறைச் செயலாளர், மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தலைவராக 1972 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை செயல்பட்டார். இந்தியாவில் அரிசி தட்டுப்பாட்டை நீக்கி மக்கள் அனைவரும் பசியாற வேண்டும் என்ற நோக்கத்தில் நவீன வேளாண் அறிவியல் முறைகளை கண்டறிய தொடர்ச்சியாக முயற்சி செய்தார். 1999இல் வெளியான டைம்ஸ் இதழின் சிறந்த 20 ஆசிரியர்கள் எனும் கௌரவத்திற்கு தேர்வான மூன்று ஆசிரியர்களின் இவரும் ஒருவர். தொடர்ச்சியாக வேளாண் துறையில் பணியாற்றிய இவர் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்றும் போற்றப்படுகிறார்.

இதுவரை மூன்று பத்ம விருதுகளையும் ஆசியாவின் நோபல் விருது என போற்றப்படும் மகசேசே விருதையும் பெற்றுள்ளார். பத்ம விபூஷன் உள்ளிட்ட ஏராளமான உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்திய மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஏராளமான கௌரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ளார. இன்று நவீன வேளாண் துறையின் பலவிதமான விமர்சனங்கள் இருந்தாலும் சுதந்திரத்திற்கு பின் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் சாவதை தடுப்பதற்கு உழைத்த மனிதர்களின் இவரும் ஒருவர் என்றால் அது மிகையல்ல.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்