தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Trichy Suicide: மகன் இறந்த விரக்தியில் தந்தை தற்கொலை..கடிதத்தால் வெளிவந்த உண்மை!

Trichy Suicide: மகன் இறந்த விரக்தியில் தந்தை தற்கொலை..கடிதத்தால் வெளிவந்த உண்மை!

Divya Sekar HT Tamil
Jan 29, 2023 12:49 PM IST

மணப்பாறை அருகே மகன் இறந்த துக்கத்தில் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை
தற்கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

மகன் மீது அதிக பாசம் வைத்திருந்த செல்லத்துரை, அவரது மறைவால் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று வீ.இடையப்பட்டியில் உள்ள தனது குல தெய்வமான உப்பிலியான் கோவிலுக்கு சென்று, அங்குள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மரத்தில் 40 வயது மதிக்கதக்க ஒருவர் சடலமாக தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள், வளநாடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விசாரணை மேற்கொண்ட நிலையில் உயிரிழந்தது செல்லத்துரை என்பது தெரியவந்தது. மேலும் அவர் சட்டைப்பையில் இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அக்கடிதத்தில், உப்பிலியானை கும்பிட்டும் தங்கள் குலம் அழிந்ததாகவும், அதனால் தனக்கு வாழப்பிடிக்கவில்லை என்றும், தனது இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து செல்லத்துரையின் அண்ணன் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

IPL_Entry_Point

டாபிக்ஸ்