தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kt Raghavan : திடீர் மூச்சு திணறல் .. கே.டி.ராகவனுக்கு தீவிர சிகிச்சை!

KT Raghavan : திடீர் மூச்சு திணறல் .. கே.டி.ராகவனுக்கு தீவிர சிகிச்சை!

Divya Sekar HT Tamil
Mar 24, 2023 08:47 AM IST

பாஜக முன்னாள் பொதுச்செயலாளர் கே.டி ராகவனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழக பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்தவர் கே.டி.ராகவன். அவர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பாஜக சார்பாக கட்சியின் கருத்துக்களை அழுத்தமாக எடுத்து வைத்து வந்தார்.

ராகவன் பாஜகவில் பரபரப்பான ஒரு நபராக இருந்து வந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆபாச வீடியோ பிரச்சனையில் சிக்கினார் . இதில் ஏற்பட்ட சர்ச்சையில் தனது பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகினார். அதன்பின்னர் தீவிர அரசியலில் இருந்து கொஞ்சம் விலகியே இருந்து வந்தார்.

இந்த நிலையில் ராகவனுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கிறது. கே.டி.ராகவனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மருத்துவர்கள் ராகவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.ராகவனுக்கு இன்று இதய அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்