தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode East Result: வயதில் சிறியவர்தான் ஆனாலும்! ஸ்டாலின் புகழ்ந்த Evks!

Erode East Result: வயதில் சிறியவர்தான் ஆனாலும்! ஸ்டாலின் புகழ்ந்த EVKS!

Kathiravan V HT Tamil
Mar 02, 2023 12:37 PM IST

”என் மகன் விட்டு சென்ற பணிகளை அமைச்சர் முத்துசாமியுடன் முதலமைச்சரை சந்தித்து ஈரோடு மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்”

ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈவிகேஎஸ் இளங்கோவன்

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கு அங்கீகாரமாகத்தான் மக்கள் இந்த வெற்றியை தந்துள்ளார்கள், அதுமட்டுமல்ல மதசார்பற்ற கூட்டணி, காங்கிரஸ், ராகுல்காந்தியின் மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் அன்பிற்கும், பாசத்திற்கும் ஆதரவுக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக அமையும். 3500 கிலோ மீட்டர் தூரத்தை நடைபயணம் மூலம் சாதித்து இருப்பது தமிழக மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

34 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றம் செல்வதை எப்படி உணர்கிறீர்கள்?   

என்னை பொறுத்தவரை ஈரோட்டில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எனது முக்கிய குறிக்கோள், மறைந்த என்னுடைய மகன் திருமகன் ஈவெரா, மாவட்ட அமைச்சர் முத்துசாமி, அரசு அதிகாரிகள் சேர்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து பேசி உள்ளார்கள். அந்த வழியில் அமைச்சர் முத்துசாமியுடன் முதலமைச்சரை சந்தித்து ஈரோடு மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்.

எம்ஜிஆர், கலைஞர் உள்ளிட்ட ஜாம்பான்கள் இருந்த சட்டசபைக்கு பிறகு ஸ்டாலின் முதல்வராக இருக்கும் பேரவைக்கு  செல்வதை எப்படி  பார்க்கிறீர்கள்?

மு.க.ஸ்டாலின் தலையில் உள்ள பேரவையில் நானும் பங்கேற்பது எனக்கு பெருமையாக உள்ளது, மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னை விட வயதில் சிறியவராக இருந்தாலும் அனுபவத்திலும், தியாகத்திலும், செயல்திறனிலும் பன்மடங்கு உயர்ந்தவர். ஆகவே அவரோடு நெருக்கமாக பேரவையில் இருக்க முடியும் என்ற நிலை வந்தது பெருமை அடைகிறேன்.

ஈரோடு கிழக்கு வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா?

கண்டிப்பாக வரும் நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பது ஈரோடு வெற்றி எடுத்துக்காட்டு.

திமுக அமைச்சர்கள் செய்த உழைப்பு சாதாரண உழைப்பு கிடையாது, அவர்கள் நின்ற தேர்தலில் கூட இப்படி உழைத்து இருப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. இரவும் காலையிலும் மாலையிலும் சென்று மக்களை சந்திதுள்ளார்கள், அமைச்சர் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

கமல்ஹாசன் பரப்புரை எப்படி இருந்தது?

கமல்ஹாசன், கனிமொழி பிரச்சாரத்திற்கு அதிக அளவில் மக்கள் வந்திருந்தார்கள். உதயநிதியை பொறுத்தவரை அவரின் பிரச்சாரம் என்பது மக்களில் ஒருவராக இருந்து பிரச்சாரம் செய்தார். 

மக்கள் அவரை அந்நியராக நினைக்காமல் தங்களில் ஒருவராக நினைக்கும் அளவுக்கு அவரின் பிரச்சாரம் இருந்தது. கடுமையான வெயிலயும் பொருட்படுத்தாமல் முதல்வர் பரப்புரை மேற்கொண்டார். எனது குடும்பத்தை பற்றி அவர் பேசும்பொதெல்லாம் அவர் மீதான மரியாதை பன்மடங்கு எனக்கு உயர்ந்தது.

எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அதிமுக வேட்பாளர் தென்னரசுவே நேற்றைய பேட்டியில் தேர்தல் ஆணையம் மிகவும் சரியாக நடந்து கொண்டது எந்தவித தவறும் நடக்கவில்லை என தெரிவித்தார். தேர்தல் ஆணையம் நாகரீகமாக நாணயமாக சட்டத்தின்படி நடந்து கொண்டார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை

IPL_Entry_Point

டாபிக்ஸ்