தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode East Result: டெபாசிட் பெற எவ்வுளவு வாக்குகள் வாங்க வேண்டும்! விவரம் இதோ!

Erode East Result: டெபாசிட் பெற எவ்வுளவு வாக்குகள் வாங்க வேண்டும்! விவரம் இதோ!

Kathiravan V HT Tamil
Mar 02, 2023 12:03 PM IST

ஈவிகேஎஸ் இளங்கோவன் 32,959 வாக்குகளை பெற்ற நிலையில் கே.எஸ்.தென்னரசு 10,727 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்

திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் - அதிமுக கூட்டணி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன்
திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் - அதிமுக கூட்டணி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன்

ட்ரெண்டிங் செய்திகள்

திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக கூட்டணி சார்பில் சார்பில் கே.எஸ்.தென்னரசுவும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதனும் தேமுதிக சார்பில் ஆனந்தனும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். பிறகட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. 3ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் ளை  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 1,832 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்தன் 220 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் விதிப்படி தேர்தலில் பதிவாகும் மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை பெறும் வேட்பாளருக்கு மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும். 74.79 சதவீதம் வாக்குகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவாகி இருந்த நிலையில் டெப்பாசிட் தொகையை திரும்ப பெற சுமார் 28,000 வாக்குகளை பெற்றாக வேண்டும் என்பது விதியாக உள்ளது.

ஈரோடு கிழக்கில் அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என திமுகவினர் பரப்புரை மேற்கொண்ட நிலையில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு டெபாசிட் வாங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்