தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode East Result: ஈரோடு வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரம்! ஸ்டாலின் பேட்டி

Erode East Result: ஈரோடு வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரம்! ஸ்டாலின் பேட்டி

Kathiravan V HT Tamil
Mar 02, 2023 01:46 PM IST

நான் ஏற்கெனவே தேசிய அரசியலில்தான் உள்ளேன்- பரூக் அப்துல்லா பேச்சுக்கு ஸ்டாலின் பதில்

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்ட போது எடுத்த படம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்ட போது எடுத்த படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் தொடர்ந்து சொல்லி வந்தது திராவிட மாடல் ஆட்சியை ஆதரிக்க வேண்டும் என்பதுதான், ஆக திராவிட மாடல் ஆட்சியை தொடர்ந்து நடத்திட வேண்டும் என மக்கள் இந்த மிகப்பெரிய ஆதரவை அளித்துள்ளார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த இடைத்தேர்தலில் தன்னையே மறந்து நாலாந்தர பிரச்சாரகரை போல் பேசிய பேச்சுக்களுக்கு மக்கள் நல்ல பாடத்தை வழங்கி உள்ளார்கள்.

20 மாத கால திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் ஒரு அங்கீகாரம் தர வேண்டும் இதை இடைத்தேர்தலாக மட்டுமின்றி இந்த ஆட்சியை எடைபோட்டு பார்க்க கூடிய தேர்தலாக பார்க்க வேண்டும் என நான் பிரச்சாரத்தில் எடுத்து சொன்னேன். 

மக்கள் நல்ல எடைபோட்டு ஆட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியை தந்திருக்கிறார்கள். விரைவில் நாம் சந்திக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக இந்த இடைத்தேர்தல் வெற்றி அமைந்துள்ளது, ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு இதய பூர்வமான நன்றி.

இந்த வெற்றிக்கு அயராது பாடுபட்ட அமைச்சர் பெருமக்கள், இன்னாள் முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயல்வீரர்கள், கூட்டணி கட்சி தோழர்களுக்கு நன்றி.

கேள்வி: தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என பரூக் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளாரே?

நான் ஏற்கெனவே தேசிய அரசியலில்தான் உள்ளேன்; அதில் எந்த மாற்றமும் கிடையாது, அதைத்தான் நேற்றையை கூட்டத்தில் பேசி உள்ளேன். யார் வெற்றி பெற்று பிரதமராக வரவேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் என்னுடைய கொள்கை என முதலமைச்சர் தெரிவித்தார்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்