தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode By Election: தீயா வேலை செய்யணு குமாரு - 233 வது களத்தில் தேர்தல் மன்னன் !

Erode by election: தீயா வேலை செய்யணு குமாரு - 233 வது களத்தில் தேர்தல் மன்னன் !

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 31, 2023 11:39 AM IST

233வது முறையான தேர்தல் மன்னன் பத்மநாபன் வேட்புமனு தாக்கல் பத்து ரூபாய் நாணயங்களை டெபாசிட்டாக அளித்த காந்திய வாதி

தேர்தல் மன்னன் பத்மநாபன் - காந்தியவாதிரமேஷ்
தேர்தல் மன்னன் பத்மநாபன் - காந்தியவாதிரமேஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா ஜனவரி 4ம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் வரும் பிப்ரவரி 27ம்தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான சட்டமன்ற இடைதேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர் செல்வம் அணிகளுக்கிடையே நிலவும் முரண்பாடுகளால் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இரட்டை இலை சின்னம் யாருக்கு வழங்கப்படும் என்பது தெரிய வந்த பின்னர் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை இன்று முதல் தினமும் காலை 10 மணி தொடங்கி மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம் . வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7ந் தேதி கடைசி நாளாகும். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 8ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும் வேட்பு மனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 10 கடைசி நாளாகும் அன்றைய தினமே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும்.

இந்நிலையில் முதல் நாளான இன்று சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன் முதல் வேட்பாளராக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தேர்தல் மன்னனான பத்மராஜன் இதுவரை 232முறை பல்வேறு தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். இந்நிலையில் தற்போது 233 ஆவது முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

காந்தி வேடமும், பத்து ரூபாய் நாணய விழிப்புணர்வும்

இதே போல் காந்தியவாதி ரமேஷ் காந்தி வேடம் அணிந்து தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் டெபாசிட் தொகை பத்தாயிரம் ரூபாயை பத்து ரூபாய் காசுகளாக மாற்றி காந்தியவாதி ரமேஷ் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பத்து ரூபாய் நாணயத்தை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து நோக்கில் தான் தான் டெபாசிட் தொகையை பத்து ரூபாய் காயின்களாக கட்டுவதாக காந்தியவாதி ரமேஷ் தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்