தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Erode By Election: Do You Know Who Can Vote By Post In Erode?

Erode By election: ஈரோட்டில் யார் யாரெல்லாம் தபால் வாக்கு செலுத்தலாம் தெரியுமா?

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 16, 2023 12:06 PM IST

31 மாற்று திறனாளிகள் உட்பட 352 பேர் 12 டி படிவம் மூலம் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து இருந்தனர்.

ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு இடைத்தேர்தல்

ட்ரெண்டிங் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனோ பாதிப்பு இருப்பதாக சந்தேகிப்பவர்கள் தங்கள் வாக்குகளை தபால் மூலம் செலுத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் தேர்தல் ஆணையம் 12 டி என்ற படிவம் மூலம் செலுத்த வழிவகை செய்துள்ளது. இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தபால் வாக்களிக்க தகுதியானவர்களாக இருக்கின்றனர். இவர்களில் தபால் வாக்கு அளிக்க விருப்பமுள்ளவர்களிடம் படிவங்கள் பெறும் பணி நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 4 ம் தேதி வரை படிவம் பெறும் பணிகளானது நடைபெற்று முடிந்தது. இதில் மொத்தம் 31 மாற்று திறனாளிகள் உட்பட 352 பேர் 12 டி படிவம் மூலம் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் 12 டி படிவம் பெற்ற நபர்களிடம் வீடு வீடாகச் சென்று அவர்களிடம் தபால் வாக்குகளை பெறும் பணி இன்று தொடங்கி இருக்கிறது.

தபால் வாக்குகளை பெறுவதற்காக ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன தற்போது இந்த ஆறு குழுக்களும் வீடு வீடாகச் சென்று தபால் வாக்குகளை பெறுகின்றனர். இவர்களுடன் வேட்பாளர்களின் முகவர்களும் செல்கின்றனர். இவை அனைத்தும் முழுமையாக தேர்தல் ஆணையத்தால் வீடியோ ஒளிப்பதிவும் செய்யப்படுகிறது.

இன்றும் நாளையும் ஆறு குழுக்களும் 352 பேரிடம் வாக்குகளை பெறுகின்றனர். இரண்டு நாட்களில் பெற முடியாதவர்களுக்கு இருபதாம் தேதி மீண்டும் ஒரு வாய்ப்பாக தபால் வாக்குகள் பெறப்பட இருக்கின்றன.

12 டி படிவம் மூலம் தபால் வாக்களிக்கும் 352 பேரும் வரும் 27ம் தேதி வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈவேரா திருமகன் திடீர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக எடப்பாடி அணி சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார். திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் மறைந்த ஈவேரா திருமகனின் தந்தையும், தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த் என்பவரும், நாம் தமிழகர் கட்சியின் சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்