தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஏழைக்கு உதவும் கட்சி அதிமுக.. ஆனால் திமுக ஆட்சி வந்ததும்..இபிஎஸ் குற்றச்சாட்டு!

ஏழைக்கு உதவும் கட்சி அதிமுக.. ஆனால் திமுக ஆட்சி வந்ததும்..இபிஎஸ் குற்றச்சாட்டு!

Divya Sekar HT Tamil
Jan 29, 2023 01:38 PM IST

EPS : அதிமுக ஆட்சியில் நான்கரை லட்சம் முதியோருக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி வந்ததும் முதியோர் உதவி தொகையை நிறுத்தி விட்டனர் என இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”ஆதரவற்ற முதியோர்களுக்கு ஆதரவு தருவேன். ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லத்தை ராஜேந்திரன் கட்டி உள்ளார். இது திறக்கப்பட்டு உள்ளது. சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக அமைச்சராக, முதலமைச்சராக இருந்துள்ளேன். அப்போது பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளேன். ஆனால் இன்று இந்த ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லத்தில் கலந்து கொண்டது உன்னதமான நிகழ்ச்சி ஆகும்.

ஒவ்வொருவரும் தாய் தந்தைக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். சிலர் தாய் தந்தையை எதிராளியாக பார்க்கிறார்கள். இப்படி இருக்க கூடாது. ஆதரவற்ற முதியோருக்கு இது போன்ற அனாதை இல்லங்கள் உதவும். புரட்சி தலைவர் காலத்திலும்,புரட்சி தலைவி காலத்திலும் பல்வேறு திட்டங்கள ஏழைகளுக்கு கொண்டு வரப்பட்டது. 

பின்னரும் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்தோம். ஏழைக்கு உதவும் கட்சி அதிமுக. அண்ணாவுக்கு குழந்தைகள் இல்லை. புரட்சிதலைவருக்கும் குழந்தைகள் இல்லை. அம்மாவுக்கும் குழந்தைகள் இல்லை. நாம் தான் அவர்களது குழந்தைகள்.

அம்மா இருந்த போது முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு முதியோர் உதவி தொகை ரூபாய் ஆயிரம் உயர்த்தி தரப்பட்டது. கிட்டத்தட்ட நான்கரை லட்சம் முதியோருக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி வந்ததும் முதியோர் உதவி தொகையை நிறுத்தி விட்டனர். 

முதியோர்கள் துன்பம் துயரம் அடையக் கூடாது. மகன், மகள் வளர்ந்த பிறகு பெற்றோரை மறந்து விடுகிறார்கள். இப்படி இருக்க கூடாது. இலவச ஆதரவற்றோர் இல்லத்தை கட்டிய ராஜேந்திரனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்