தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Elephant Intimidation: எங்க ஏரியா உள்ள வராதே.. வனத்துறை ஊழியரை எச்சரித்த ஒற்றை யானை!

Elephant Intimidation: எங்க ஏரியா உள்ள வராதே.. வனத்துறை ஊழியரை எச்சரித்த ஒற்றை யானை!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 16, 2023 10:50 AM IST

சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானை கூட்டத்தை வனத்துறை ஊழியர் ஒருவர் அடர்ந்த காட்டுக்குள் விரட்ட முயற்சித்தார். அதிலிருந்து பிரிந்து வந்த ஒற்றை பெண் காட்டு யானை வனத்துறை ஊழியரை மிரட்டும் வகையில் அதிக சத்தத்தோடு பிளிரி எச்சரித்து விட்டு சென்றது. இதில் அந்த ஊழியர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

வன ஊழியரை மிரட்டும் ஒற்றை யானை
வன ஊழியரை மிரட்டும் ஒற்றை யானை

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள காட்டு விலங்குகள் தண்ணீர் தேடி காட்டுப்பகுதியை சுற்றியுள்ள ஆழியார் அணை மற்றும் நவமலை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது சுற்றி வருகிறது. சுற்றுலா பயணிகள் பயணிக்கும் இந்த பாதையில் யானைகள் அதிக அளவில் கூட்டமாக நடமாடுவதால் வனத்துறை ஊழியர்கள் சுழற்சி முறையில் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆனைமலை அடுத்த நவமலை செல்லும் வழியில் சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானை கூட்டத்தை வனத்துறை ஊழியர் ஒருவர் அடர்ந்த காட்டுக்குள் விரட்ட முயற்சித்தார். அதிலிருந்து பிரிந்து வந்த ஒற்றை பெண் காட்டு யானை வனத்துறை ஊழியரை மிரட்டும் வகையில் அதிக சத்தத்தோடு பிளிரி எச்சரித்து விட்டு சென்றது. இதில் அந்த ஊழியர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

முன்னதாக பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் வேட்டைத் தடுப்பு முகாமில் இணைக்கப்பட்ட பழங்குடியினரான பொம்மா, கடந்த மார்ச் மாதம் கால்நடையாக ரோந்து சென்றபோது யானையால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்தபோது பொம்மாவும் மற்ற இரண்டு காவலர்களும் காட்டுக்குள் நடந்து சென்று கொண்டிருந்தனர், மற்ற இருவரும் தப்பியோடிய நிலையில், பொம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு, சாமராஜ நகர் மாவட்டம் சரகூர் தாலுக்காவில் உள்ள தாதாதஹள்ளி பழங்குடியினர் காலனியில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்தில் உள்ள பண்ணைப்பட்டி கோம்பை வெள்ளமடத்துப்பட்டி பகுதியில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றியவர் 51 வயதான சுந்தர மூர்த்தி. இவர் கோம்பை அருகே குடியிருப்பு பகுதிக்கு வந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது சுந்தர மூர்த்தி பட்டாசு கொளுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது யானை தாக்கியது. இதையடுத்து அங்கிருந்த வர்கள் அனைவரும் ஓடிய நிலையில் நிலை தடுமாறி விழுந்த சுந்தரமூர்த்தியை யானை தலையில் மிதித்து கொன்றது.

இந்நிலையில் தற்போது நவமலை அருகே யானை மிரட்டி செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாவி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்