தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Do You Want To Aavin ? Aadhaar Is Mandatory

Aavin with aadhar: ஆவின் வேண்டுமா? ஆதார் கட்டாயம்! புதிய உத்தரவின் விபரம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 03, 2023 02:55 PM IST

இதே நிலை நீடித்தால் இன்னும் ஓராண்டிற்குள் ஆவின் நிறுவனம் கடுமையான நிதியிழப்பில் செல்வதாக கூறி ஆவின் இழுத்து மூடப்படலாம்

ஆவின் பச்சை நிற பாக்கெட் பால்
ஆவின் பச்சை நிற பாக்கெட் பால்

ட்ரெண்டிங் செய்திகள்

மத்திய மாநில அரசுகளின், இலவசம் மற்றும் மானியம் வழங்கும் திட்டங்களுக்கு இதுவரை ஆதார் கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு வீடுகளின் மின் இணைப்புகளை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால் இதுவரை சிலர் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்காத நிலையில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்டது.

ஆவின் மோலாளர் அறிவிப்பு
ஆவின் மோலாளர் அறிவிப்பு

இந்நிலையில் அடுத்த கட்டமாக மதுரை பழங்காநத்தம் மண்டல அலுவலக பொது மேலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பழங்காநத்தம் மண்டலம் பகுதியில் ஆவின் பால் அட்டை பெற்று பால் பெறும் வாடிக்கையாளர்கள் வரும் மார்ச் 23 மாதாந்திர பால் அட்டை பெற ஆதார் நகல் மற்றும் குடுப்ப அட்டை நகல் வழங்கி பெற்றுக்கொள்ளவும். மேற்காணும் அடையாள அட்டை இல்லாமல் பால் அட்டை வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் ஆவின் பால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் நிறுவன தலைவர் சு.ஆ. பொன்னு சாமி தனது முகநூலில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அதில், " ஆவின் பால் வேண்டுமானால் ஆதார் எண் கொடுக்க வேண்டுமாம்,

ஆவின் பால் கிடையாது என்று கூறாமல் ஆதார் கொண்டு வா என்பது, நிலைப்படுத்தப்பட்ட பாலில் 1% கொழுப்பு சத்து அளவை குறைத்து சத்தில்லா பாலை அதே விற்பனை விலையில் விற்பனை செய்வது, நிறைகொழுப்பு பால் விற்பனையை முற்றிலுமாக நிறுத்துவது, நிலைப்படுத்தப்பட்ட பால் விற்பனைக்கு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவது, பால் முகவர்களுக்கு தாமதமாக விநியோகம் செய்வது, விற்பனை பிரிவை இழுத்து மூடுவது என அனைத்து வகையான வேலைகளையும் ஆவின் நிர்வாகம் மேற்கொள்ள தொடங்கி விட்டது, தமிழக அரசும், பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றன.

இதே நிலை நீடித்தால் இன்னும் ஓராண்டிற்குள் ஆவின் நிறுவனம் கடுமையான நிதியிழப்பில் செல்வதாக கூறி ஆவின் இழுத்து மூடப்படலாம், அல்லது தனியாருக்கு தாரை வார்க்கப்படலாம். என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்