தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Dmk Here Has Rejected The Tamil Nadu Governor R N Ravi Clarification

DMK Rejects: ஆளுநர் விளக்கத்தை நிராகரித்த திமுக: ஏன் என விளக்கிய நிர்வாகிகள்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 19, 2023 01:51 PM IST

DMK rejects Governor clarification: ‘ஆளுநர் எண்ணம் பெயர் மாற்றத்தை பரிந்துரைப்பதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அவரது நோக்கம் திமுகவை பிளவுபடுத்தும் கட்சியாகக் காட்டுவதாகும்,’ -டிகேஎஸ்!

திருச்சி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன்
திருச்சி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன்

ட்ரெண்டிங் செய்திகள்

“இரண்டுக்கும் இடையேயான வரலாற்றுப் பண்பாட்டுத் தொடர்பைப் பற்றிப் பேசும்போது, ​​‘தமிழகம்’ என்ற சொல்லைக் குறிப்பிட்டேன். அந்தக் காலத்தில் தமிழ்நாடு இல்லை. எனவே, வரலாற்று கலாச்சார சூழலில், 'தமிழகம்' என்ற வார்த்தையை மிகவும் பொருத்தமான வெளிப்பாடாக நான் குறிப்பிட்டேன், ”என்று ரவியை மேற்கோள் காட்டி ராஜ் பவனின் அதிகாரப்பூர்வ அறிக்கை புதன்கிழமை வெளியானது.

அந்த உரையின் அடிப்படையை புரிந்து கொள்ளாமல், தமிழகம் என்ற வார்த்தைக்கு கவர்னர் எதிரானவர் என்ற வாதங்கள் விவாதப் பொருளாக மாறியுள்ளது. எனவே, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த விளக்கத்தை அளிக்கிறேன் என்று அந்த அறிக்கையில் ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் “தமிழகம்” குறித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் விளக்கத்தை திமுக நிராகரித்ததாகவும், திமுகவை பிரிவினைவாதக் கட்சியாகக் காட்டுவதுதான் அவரது நோக்கம் என்றும் திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆளுநராக பதவி வகிக்கும் ஒருவருக்கு தமிழ்நாடு அல்லது அதன் கலாச்சாரம் அல்லது மொழி குறித்து கருத்து தெரிவிக்க எந்த இடமும் இல்லை என்றும் திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன கூறியுள்ளார். 

ராஜ்பவனில் இருந்து வெளியான ஆளுநரின் அறிக்கை குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பதிலளித்த திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், 

“அவரது (கவர்னர்) எண்ணம் பெயர் மாற்றத்தை பரிந்துரைப்பதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அவரது நோக்கம் திமுகவை பிளவுபடுத்தும் கட்சியாகக் காட்டுவதாகும். தனி நாட்டுக்காக போராடும் சக்தியாக திமுகவை சித்தரிக்க விரும்புகிறார், ஆனால் இது உண்மையல்ல. நாங்கள் தனி தேசத்தை கோரவில்லை, ஆனால் நிர்வாக காரணங்களுக்காக மாநிலத்திற்கு கூடுதல் அதிகாரங்களை கோருகிறோம்.  

நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் இருக்கிறோம், ஒவ்வொரு கஷ்டத்திலும் நாங்கள் இந்தியாவுடன் நின்றோம். இந்திய-பாகிஸ்தான் போரின்போதும், தேசத்துடன் நமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், இந்திய ராணுவத்துக்கு திமுக பெரும் தொகையை நிதி திரட்டியது. 

திமுகவை தவறாக சித்தரிப்பதே ஆளுநரின் நோக்கமாகும் என்றும், பொதுமக்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் பரவலான எதிர்ப்பின் காரணமாகவே அவர் தன் கருத்தை விலக்க நேரிட்டது. திமுகவுக்கு எதிராக ஏதாவது செய்யுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது, ஆனால் அது தவறாகப் போனதால், அவர் அதை வாபஸ் பெற்றார். இனி ஆளுநர் அவரது நிலைப்பாட்டை மாற்றுவார்,’’

என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

மேலும் இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை தொடர்பு கொண்டு கேட்ட போது, “தமிழகம், அதன் கலாச்சாரம் அல்லது மொழி குறித்து கருத்து தெரிவிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” என்று மட்டும் கூறி, விளக்கமளிக்க மறுத்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்