DMK: 'நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆனார் கனிமொழி!’ கொறடா ஆனார் ஆ.ராசா! டி.ஆர்.பாலு, திருச்சி சிவாவுக்கும் பொறுப்பு!-dmk appoints kanimozhi as parliamentary committee chairman a raja takes whip role - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk: 'நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆனார் கனிமொழி!’ கொறடா ஆனார் ஆ.ராசா! டி.ஆர்.பாலு, திருச்சி சிவாவுக்கும் பொறுப்பு!

DMK: 'நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆனார் கனிமொழி!’ கொறடா ஆனார் ஆ.ராசா! டி.ஆர்.பாலு, திருச்சி சிவாவுக்கும் பொறுப்பு!

Kathiravan V HT Tamil
Jun 10, 2024 09:39 PM IST

Parliamentary Committee: மக்களவை - மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து கழக நாடாளுமன்ற குழுத் தலைவராக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பியும்; மக்களைவைக் குழுத் தலைவராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பியும் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

DMK: நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆனார் கனிமொழி! கொறடா ஆனார் ஆ.ராசா! டி.ஆர்.பாலு, திருச்சி சிவாவுக்கும் பொறுப்பு!
DMK: நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆனார் கனிமொழி! கொறடா ஆனார் ஆ.ராசா! டி.ஆர்.பாலு, திருச்சி சிவாவுக்கும் பொறுப்பு!

திமுக நாடாளுமன்ற எம்.பிக்கள் குழு அறிவிப்பு 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மக்களவை - மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து கழக நாடாளுமன்ற குழுத் தலைவராக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பியும்; மக்களைவைக் குழுத் தலைவராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பியும் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மக்களைவைக் குழுத் துணைத் தலைவராக, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநி மாறன், எம்.பியும், மக்களைவை கொறடாவாக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பியும் செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மாநிலங்களவைக்குழுத் தலைவராக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, எம்.பியும், மாநிலங்களவைக் குழுத் துணைத் தலைவராக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், எம்.பியும், மாநிலங்களவை கொறடாவாக தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், எம்.பியும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இரு அவைகளின் பொருளாளராக கொள்கைப் பரப்பு செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகனை அக்கட்சித்தலைமை நியமனம் செய்து உள்ளது. 

நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் 

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 15ஆம் தேதி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றம் தொடங்கும் முதல் இரண்டு நாட்களுக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் நியமிக்கப்படுவார் என்றும் நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

முதல் கூட்டத்தை தொடங்கி வைக்கும் குடியரசுத் தலைவர்

அடுத்த நாள், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றி கூட்டத்தொடரை முறையாக துவக்கி வைக்க உள்ளார்.

அமர்வின் தேதிகள் குறித்த இறுதி அழைப்பு புதிய மத்திய அமைச்சரவையால் எடுக்கப்படும். இந்த அமர்வின் போது, பிரதமர் மோடி தனது அமைச்சர்கள் குழு உறுப்பினர்களை இரு அவைகளுக்கும் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த கூட்டத்தொடர் ஜூன் 22ஆம் தேதி நிறைவடையும் என்று தெரிகிறது.

40 தொகுதிகளை கைப்பற்றிய திமுக கூட்டணி

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை திமுக கூட்டணியில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக, மறுமலர்ச்சி திமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. 

இதில் திமுக 22 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றது. 

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளை கைப்பற்றின. இந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று உள்ளது. 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.