தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Dmk Vs Aiadmk: ‘ஜெயித்தாலும் சரிந்த திமுக.. தோற்றாலும் எழுந்த அதிமுக’ செல்வாக்கை சொல்லும் முழு டேட்டா!

DMK vs AIADMK: ‘ஜெயித்தாலும் சரிந்த திமுக.. தோற்றாலும் எழுந்த அதிமுக’ செல்வாக்கை சொல்லும் முழு டேட்டா!

Jun 05, 2024 02:42 PM IST Stalin Navaneethakrishnan
Jun 05, 2024 02:42 PM IST
  • DMK Vs AIADMK: கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை கைப்பற்றியது திமுக தலைமையிலான கூட்டணி. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் தேனி தொகுதியில் வெற்றி பெற, அதிமுகவுக்கு அது ஒன்று மட்டுமே ஆறுதலாகவும் இருந்தது. இந்நிலையில், முதல்வராக, திமுக தலைவராக ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலை சந்தித்தது. இந்த முறை போட்டி கடினமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றன. கடந்த முறை ஒரு தொகுதியில் தோற்றாலும், திமுக பெற்ற வாக்கு விகிதம் பெரிய அளவில் இருந்தது. அதே நேரத்தில், அனைத்து தொகுதியில் வெற்றி பெற்றும் திமுகவின் வாக்கு சதவீதம் கடுமையாக குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் அதிமுகவின் ஓட்டு சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதில் குறிப்பிட வேண்டிய விசயம், பாஜகவின் ஓட்டு சதவீதம் உயர்ந்திருக்கிறது. அது திமுக ஓட்டு சதவீதத்தை கடுமையாக பாதித்திருக்கிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் பார்க்கும் போது, 2019ல் திமுக பெற்ற வாக்கு சதவீதம் 32.76 சதவீம் அதே திமுக , 2024ல் பெற்ற வாக்கு சதவீதம் 26.93 சதவீதம் இது கடந்த தேர்தலை விட 5.83 சதவீதம் குறைவாகும். அதே நேரத்தில் அதிமுக, 2019 தேர்தலில் 18.48 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது. இந்த முறை 20.46 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறது. இது கடந்த தேர்தலோடு ஒப்பிடும் போது, 2.06 சதவீதம் அதிகமாகும். இதில் மற்றொரு குறிப்பிடும் சாரம்சமும் உள்ளது. கடந்த தேர்தலில் திமுக, தற்போதுள்ள இதே கூட்டணியுடன் தான் தேர்தலை சந்தித்தது. ஆனால், அதிமுக இந்த முறை பாஜக, பாமக, தமாக உள்ளிட்ட பல கூட்டணி கட்சிகள் இல்லாமல் போட்டியிட்டது. அப்போது அதிமுக உடன் ஓபிஎஸ் இருந்தார். இந்த முறை அவரது அணி என்கிற ஒரு தரப்பு பிரிவையும் அதிமுக சந்தித்தது. அத்தனையும் கடந்து அதிமுக இந்த முறை பெற்றிருக்கும் வாக்குகள், அபாரமானது தான் என்றாலும், வெற்றி இல்லை எனும் போது, அதை கொண்டாடவோ, தூக்கிப் பிடிக்கவோ இயலாத நிலையில் அதிமுக உள்ளது. அடுத்த இடத்தில் பாஜக, கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 3.66 சதவீதத்தை பெற்றத பாஜக. இந்த முறை அதிமுக கூட்டணி இல்லாமல் 11.24 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது பாஜக. இது கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது, 7.58 சதவீதம் வாக்குகள் அதிகமாகும். உண்மையில் பாஜகவின் இந்த வளர்ச்சி, கவனிக்க வேண்டிய ஒன்று தான். குறிப்பாக, திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை அதிமுகவை விட, பாஜக தான் அதிகம் அறுவடை செய்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியும் இந்த முறை சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறது. சில இடங்களில் மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறது. ஆனாலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் புள்ளிகளை மட்டுமே தேர்தல் ஆணையம் தனித்தனியாக வழங்குகிறது.
More