தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் பரபரப்பு: திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்!

ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் பரபரப்பு: திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்!

Karthikeyan S HT Tamil
Feb 16, 2023 11:39 AM IST

Erode East bypoll: ஈரோடு கிழக்கு தொகுதியில் செயல்பட்டு வந்த திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் பணிமனைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்தனர்.

துணை ராணுவம் மற்றும் போலீசார்.
துணை ராணுவம் மற்றும் போலீசார்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்றக் கூட்டணியின் சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அ.தி.மு.க வேட்பாளராக இரட்டை இலைச் சின்னத்தில் தென்னரசும் போட்டியிடுகின்றனர்.

இந்த இடைத்தேர்தல் திமுகவுக்கு கெளரவப் பிரச்னையாகவும், அதிமுகவுக்கு வலிமையை நிரூபிக்கும் களமாகவும் கருதப்படுவதால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து 10-க்கும் மேற்பட்ட திமுக அமைச்சர்களும், அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் பணிமனை அமைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அனுமதியின்றி செயல்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் செயல்பட்டு வந்த திமுகவின் 10 பணிமனைகள், அதிமுகவின் 4 பணிமனைகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சீல் வைத்தனர். தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட புகார் மனுக்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினருடன் பணிமனைக்கு சீல் வைக்க வந்த தேர்தல் அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்