தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'வாக்காளரை அடைத்து வைப்பதெல்லாம்…!' திமுகவை விளாசும் பிரேமலதா!

'வாக்காளரை அடைத்து வைப்பதெல்லாம்…!' திமுகவை விளாசும் பிரேமலதா!

Kathiravan V HT Tamil
Feb 21, 2023 01:35 PM IST

”ஈவிகேஎஸ் இளங்கோவன் ஜெயித்தாலும் ஈரோட்டில் மீண்டும் இடைத்தேர்தல் உறுதி”

ஈரோடு கிழக்கில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை
ஈரோடு கிழக்கில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை

ட்ரெண்டிங் செய்திகள்

2021 தேர்தலில் வெற்றி பெற்று வருவதற்கு முன்னர் ஆளுங்கட்சி என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தார்கள் என்பதை மக்கள் ஆளுங்கட்சியினரிடம் கேட்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி உருவானபோதே அங்கு முதலில் வெற்றி பெற்றது தேமுதிகவின் முரசு சின்னம்தான்.

மற்றவர்கள் நிலத்தை திருடி அதனை அபகரிக்கும் அரசியல் வியாபாரிகள் மத்தியில், நிலத்தை வாங்கி பட்டா போட்டு மக்களுக்கு கொடுத்தவர் நமது கேப்டன்.

துணைராணுவம் என்ன செய்கிறது?

எல்லா இடத்திலும் ஆடுமாடுகளை அடைப்பதை போல் ஒட்டுமொத்த மக்களை அடைத்து வைத்து அடிமைகளாக நடத்தும் திமுகவிற்கு கண்டனம் தெரித்துக் கொள்கிறேன். மனித உரிமை ஆணையமும், தேர்தல் ஆணையமும், துணை ராணுவமும் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் ஒருவரை கூட இந்த துணை ராணுவமும், போலீசும் பிடிக்கவில்லை. ஆட்சிபலம், பணபலம் எல்லாவற்றையும் மீறி ஓட்டுக்கேட்கும் நமது வேட்பாளர் ஆனந்தனுக்கு வாக்களிக்க வேண்டும்.

ஈவிகேஎஸ் ஜெயித்தாலும் இடைத்தேர்தல் உறுதி

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சட்டமன்றம் செல்லவிருப்பம் கிடையாது, அவரின் எண்ணமெல்லாம் எம்.பியாக வேண்டும், டெல்லிக்கு செல்ல வேண்டும் என்பதே, அதனால் அவருக்கு ஓட்டுபோட்டு ஜெயிக்க வைத்தாலும் இடைத்தேர்தல் வரப்போவது உறுதி.

அதிமுக வேட்பாளருக்கும் வயது ஆகிவிட்டது, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் வயதாகிவிட்டது. இன்னும் திருமணம் கூட செய்து கொள்ளாமல் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நமது வேட்பாளர் ஆனந்தன் உள்ளார்.

மின்சார கட்டணம் ராக்கெட் போல் ஏறிக்கொண்டே போகிறது. ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, பெண்களுக்கு மாதம் 1000, டாஸ்மாக் கடைகளை மூடும் அறிவிப்பு, நீட் ஒழிப்பு உள்ளிட்ட எதையும் செய்யவில்லை, இதை மக்களிடம் கேட்டால் இல்லை என்ற பதில்தான் வரும்.

”வாக்காளர்களை அடைத்து வைப்பது பொட்டைத்தனம்”

கிளியை கூட கூண்டில் அடைக்க கூடாது என வனவிலங்கு துறை அதனை தடுக்கிறார்கள், ஆனால் ஆறு அறிவு படைத்த மனிதர்களை கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல் பொட்டைத்தனமாக வாக்குகளை கேட்க வேண்டும் என்ற நோக்குடன் அத்தனை பேரையும் அடைத்து வைத்து காசு கொடுத்து வைக்கிறார்கள். இதற்கு எதற்கு தேர்தல் நடத்த வேண்டும், உண்மையில் இந்த தேர்தல் தடை செய்யப்பட வேண்டியத் தேர்தல் எனக் கூறினார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்