தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dig Vijayakumar: மகளை மருத்துவராக்க ஆசைப்பட்டார் டிஐஜி விஜயகுமார் - கண்ணீருடன் கதறும் ஐபிஎஸ் நண்பர்கள்!

DIG Vijayakumar: மகளை மருத்துவராக்க ஆசைப்பட்டார் டிஐஜி விஜயகுமார் - கண்ணீருடன் கதறும் ஐபிஎஸ் நண்பர்கள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 07, 2023 01:06 PM IST

தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் அவரது மகளை மருத்துவராக்க மிகவும் ஆசைப்பட்டார்.

டிஐஜி விஜயகுமார்
டிஐஜி விஜயகுமார்

ட்ரெண்டிங் செய்திகள்

இவரின் திடீர் தற்கொலை காரணமாகத் தமிழ்நாடு காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. ஐபிஎஸ் அலுவலர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். டிஐஜி விஜயகுமாருக்கு நந்திதா என்ற ஒரு மகள் இருக்கிறார். அவரை மருத்துவருக்குப் படிக்க வைக்க வேண்டும் என விஜயகுமார் ஆசைப்பட்டார்.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மகள் நீட் தேர்வு எழுதித் தேர்வாகி இருக்கும் நிலையில், எந்த கல்லூரியில் மகளைச் சேர்க்கலாம் என்பது பற்றி விஜயகுமார் ஆலோசனை செய்து வந்துள்ளார். இந்த சமயத்தில் தான் அவர் திடீரென துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பி ஆக விஜயகுமார் பணியாற்றியுள்ளார். சி.பி.சி.ஐ.டி எஸ்.பி-யாக இவர் இருக்கும்போது திறம்பட பணியாற்றியுள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு முறைகேடு குறித்துப் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த சூழ்நிலையில் அந்த வழக்கு குறித்து தீவிரமாகத் துட்டுத் தொல்லைக்கு பல்வேறு தகவல்களைத் திரட்டி உள்ளார். மேலும் பாலியல் வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபா வழக்கையும் இவர் தான் கையாண்டு உள்ளார்.

அண்ணாநகர் துணை காவல் ஆணையராக இவர் பணியாற்றிய போது புகார் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண்பதில் மிகுந்த கவனம் செலுத்தி பணியாற்றி வந்துள்ளார். அவருடைய பணிக் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து மகளைப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

அதேசமயம் எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களிடம் உதவி கேட்டு நாம் நின்று விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் என அவருடன் பயணித்த சக ஐபிஎஸ் நண்பர்கள் கூறி கண்ணீர் வடிக்கின்றனர். டிஐஜியாக பதிவு உயர்வு கிடைத்ததும் அவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார்.

ஆனால் இதனை அவர் விரும்பவில்லை என தகவல்கள் கூறுகின்றன. அண்ணா நகரில் விஜயகுமார் பணியாற்றிய பொழுது அவருடன் பணியாற்றிய பலர் தற்போதும் அண்ணா நகரில் பணியாற்றி வருகின்றனர். இந்த செய்தியைக் கேட்டு அவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

2007 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற குரூப் 1 தேர்வு வெற்றி பெற்று டிஎஸ்பி ஆகப் பதவி ஏற்றார். பின்னர் பணியில் இருந்து கொண்டே 2009 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வு எழுதி பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளார். அதற்குப் பிறகு காவல்துறை அலுவலராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்