தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Youtube : ஆளுநர், முதல்வர் குறித்து அவதூறு - 386 வீடியோக்களை நீக்க யூடியூப்-க்கு சைபர் க்ரைம் பிரிவு பரிந்துரை!

YouTube : ஆளுநர், முதல்வர் குறித்து அவதூறு - 386 வீடியோக்களை நீக்க யூடியூப்-க்கு சைபர் க்ரைம் பிரிவு பரிந்துரை!

Divya Sekar HT Tamil
May 05, 2023 01:14 PM IST

ஆளுநர், முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை நீக்க யூடியூப்-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறையின் சைபர் கிரைம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

386 வீடியோக்களை நீக்க யூடியூப்-க்கு சைபர் க்ரைம் பிரிவு பரிந்துரை
386 வீடியோக்களை நீக்க யூடியூப்-க்கு சைபர் க்ரைம் பிரிவு பரிந்துரை

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து தமிழக சைபர் க்ரைம் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சமூக வலைதளங்களில், தமிழக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டில், இதுவரை 40 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை தடை செய்ய யூடியூப்-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 221 சட்டவிரோத கடன் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும் 61 கடன் செயலிகளை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்