தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  College: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2ம் கட்ட கலந்தாய்வு! வேளாண் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்! விவரம் என்ன?

College: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2ம் கட்ட கலந்தாய்வு! வேளாண் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்! விவரம் என்ன?

Priyadarshini R HT Tamil
Jun 11, 2023 01:12 PM IST

Arts and Science Counselling : தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல் பொது கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு வகையான பாடப் பிரிவுகளில் இருக்கும் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சேர்வதற்கு கடந்த மாதம் 8ம் தேதி முதல் 22ம் தேதி வரை விண்ணப்ப பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 மாணவ, மாணவிகள் விண்ணப்ப பதிவு செய்திருந்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகள், தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்கள் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு மே 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்து 363 மாணவ, மாணவிகளுக்கு இடங்கள் கிடைத்தன.

பொது கலந்தாய்வு 2 கட்டங்களாக நடத்தப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்து இருந்தது. அதன்படி முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 1ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளின் மொத்த எண்ணிக்கை 40,287ஐ தொட்டுள்ளது. இவர்களில் 15,034 பேர் ஆண்கள், 25,253 பெண்கள். இவர்களில் 10,918 மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை (திங்கள் கிழமை) முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து 22ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேளாண் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிப்பதாவது –

வேளாண் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் வேளாண்மை (ஆங்கில வழி, தமிழ் வழி), தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு (டிப்ளமோ) தகுதியானவர்களிடம் இருந்து இணைய வழியில் (www.tnagfi.ucanapply.com) விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் கடந்த 9ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாணவர்களின் நலன்கருதி விண்ணப்பிப்பதற்கான கடைசி அடுத்த மாதம் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்