தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cm Stalin: முதல்வர் ஸ்டாலின் கையில் லிஸ்ட் - அதுதான் அடுத்த டுவிஸ்ட்

CM Stalin: முதல்வர் ஸ்டாலின் கையில் லிஸ்ட் - அதுதான் அடுத்த டுவிஸ்ட்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 05, 2023 01:24 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய பட்டியல் ஒன்றைத் தயார் செய்து கையில் வைத்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் பதவிக் காலமானது நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் தற்போது அந்த தலைமைச் செயலர் பதவிக்கு யார் வருவார்? எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் வரும் ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ளார். அவர் ஓய்வு பெற்ற பிறகு தலைமை தகவல் ஆணையர் பொறுப்பிற்குத் தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. அப்படி இல்லை என்றாலும் வேறு ஏதாவது மிகப்பெரிய பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் தமிழ்நாட்டிற்குப் புதிதாகத் தலைமைச் செயலாளர் பதவிக்கு ஏதேனும் முக்கிய அந்தஸ்தில் இருக்கும் ஐஏஎஸ் அலுவலர் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும். அதனை முதலமைச்சர் ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும்.

அந்த வகையில் ஐந்து பேர் கொண்ட பட்டியல் ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்து வைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அந்த பட்டியலில் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ், விக்ரம் கபூர் ஐஏஎஸ், அதுல்ய மிஸ்ரா ஐஏஎஸ், ஜிதேந்திரநாத் ஸ்வைன் ஐஏஎஸ் மற்றும் பிரதீப் யாதவ் ஐஏஎஸ் உள்ளிட்டோர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த ஐந்து பேரில் யாரேனும் ஒருவரைத் தமிழ்நாடு தலைமைச் செயலாளராக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் மட்டுமல்லாது கூடுதல் தலைமைச் செயலாளர்கள் அந்தஸ்தில் 33 ஐஏஎஸ் அலுவலர்கள் இருக்கிறார்கள். இவர்களில் யாரேனும் ஒருவரைத் தலைமைச் செயலாளராகத் தேர்வு செய்யும் அதிகாரமும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இருக்கிறது.

எத்தனை ஐஏஎஸ் அலுவலர்கள் இருந்தாலும் முதலமைச்சராக வீற்றிருக்கும் அவர்களின் ஆட்சியை நம்பிக்கை குறையாமல் திறமையுடன் நடத்திச் செல்லும் ஆற்றல் மிக்க ஒருவரைதான் தேர்வு செய்யப்படுவார்கள். அப்படிப்பட்ட இந்த வாய்ப்பு யாருக்குக் கிடைக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்