தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ceo Transferred: முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம்.. முழு விவரம்

CEO Transferred: முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம்.. முழு விவரம்

Manigandan K T HT Tamil
May 03, 2023 11:24 AM IST

Department of School Education: ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறை வளாகம்
பள்ளிக் கல்வித் துறை வளாகம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு-III ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி, அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.

அதன்படி, திருப்பூரில் முதன்மை கல்வி அலுவலர் இர.திருவளர் செல்வி, ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநராகவும், ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குநராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகெளரி, சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராகவும், கோயமுத்தூர் முதன்மை கல்வி அலுவலர் இரா.பூபதி, சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநராகவும் (நிர்வாகம்) பணியிடமாற்றம் செய்யப்பட்டுகின்றனர்.

பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலர், ரெ.அறிவழகன், விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலராகவும், திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர் ர.பாலமுரளி, திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர் மு.சிவக்குமார், திருச்சி முதன்மை கல்வி அலுவராகவும், கன்னியாகுமரி முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி, திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும் பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

சேலம் முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகன், கன்னியாகுமரி முதன்மை கல்வி அலுவலராகவும், புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும் பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

தென்காசி முதன்மைக் கல்வி அலுவலர் மு.கபீர், சேலம் முதன்மை கல்வி அலுவலராகவும், கள்ளக்குறிச்சி முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் ஜி.சரஸ்வதி, திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலராகவும் பணியிடமாற்றண் செய்யப்படுகின்றனர்.

திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் த.இராமன், விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் துணை இயக்குநர் பி.ஏ.ஆறுமுகம், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநராகவும் பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனர் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்