தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rain:‘இன்று 17 மாவட்டங்களில் மழை! நாளை ஆரஞ்ச் அலார்ட்!’ வானிலை மையம் எச்சரிக்கை!

Rain:‘இன்று 17 மாவட்டங்களில் மழை! நாளை ஆரஞ்ச் அலார்ட்!’ வானிலை மையம் எச்சரிக்கை!

Kathiravan V HT Tamil
Nov 03, 2023 11:09 AM IST

”நாளைய தினம் தமிழ்நாடு கேரளா, மாஹே மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலார்ட்”

மழை
மழை

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால் நாளைய தினம் தமிழ்நாடு கேரளா, மாஹே மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்தியா வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கரூர், திருச்சி, தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 13 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் இடி மின்னல் உடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை இன்றுடன் முடியும் அக்டோபர் மாதம் வரை தமிழகம், புதுவை, காரைக்கல் பகுதிகளில் இயல்பை விட 43% குறைவாக பதிவாகி உள்ளது. பதிவான மழையின் அளவு 98 மி.மீ ஆனால் இந்த காலகட்டத்தின் இயல்பான அளவு 171 மி.மீ ஆகும். கடந்த 123 ஆண்டுகளில் 9ஆவது முறையாக குறைவான அளவு மழை பதிவாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாகவும், 6 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், 17 மாவட்டங்ங்களில் இயல்பை விட மிக குறைவான அளவு மழையும் பதிவாகி உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்