தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Job Opportunities : மத்திய அரசுப் பணி! பொறியியல், எம்.பி.ஏ படித்தவர்களுக்கு என்ன வேலை? – விவரங்கள் உள்ளே!

Job Opportunities : மத்திய அரசுப் பணி! பொறியியல், எம்.பி.ஏ படித்தவர்களுக்கு என்ன வேலை? – விவரங்கள் உள்ளே!

Priyadarshini R HT Tamil
Jul 31, 2023 12:09 PM IST

Job Opportunities : மத்திய அரசில் என்ன வேலை? பொறியியல் மற்றும் எம்பிஏ படித்தவர்களுக்கு எங்கு வேலை? விவரங்களை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

காலியிடம் - ஏரோநாட்டிக்கல் ஆபிசர் 26, சிவில் ஹைட்ரோகிராபிக் ஆபிசர் 1, முதுநிலை நிர்வாக அலுவலர் 20, சயின்டிஸ்ட் பி 7, அசிஸ்டென்ட் ஜியோபிசிஸ்ட் 2 என மொத்தம் 56 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி - தொடர்புடைய பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது – ஜியோபிரிஸ்ட் 40, மற்ற பிரிவினருக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயதில் சலுகை உண்டு.

விண்ணப்பிக்கும் முறை - இணைய வழி

தேர்ச்சி முறை - எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள் – 10.08.2023

மேலதிக விவரங்களுக்கு www.upiconline.nic.in என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்.

பொறியியல் படிப்பு முடித்தவருக்கு வேலை

இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தில் (ஐ.ஆர்.இ.எல்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் - மேனேஜ்மென்ட் டிரைய்னி பதவியில் டெக்னிக்கல் (மெக்கானிக்கல், மைனிங் எலக்ட்ரிக்கல், கெமிக்கல், மினரல், எச்.ஆர். நிதி பிரிவில் 35 இடங்கள் உள்ளன)

கல்வித் தகுதி - டெக்னிக்கல் பணிக்கு பி.இ/ பிடெக், எச்.ஆர் மற்றும் நிதி பணிக்கு எம்.பி.ஏ. முடித்திருக்க வேண்டும்.

வயது – 20.08,2023 அடிப்படையில் 27க்குள் இருக்கவேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை - இணைய வழி

விண்ணப்பக்கட்டணம் – ரூ.500. பட்டியல் பிரிவினருக்கு, கட்டணம் இல்லை.

தேர்ச்சி முறை - எழுத்துத்தேர்வு நேர்முகத்தேர்வு

தேர்வு மய்யம் - தமிழ்நாட்டில் சென்னை, நாகர்கோவில்,

விண்ணப்பிக்க கடைசி நாள் – 20.08.2023

மேலதிக விவரங்களுக்குwww.irel.co.in என்ற இணைய முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்