தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Minister Senthil Balaji: மத்திய படை பாதுகாப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி!

Minister Senthil Balaji: மத்திய படை பாதுகாப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி!

Karthikeyan S HT Tamil
Jun 17, 2023 11:02 AM IST

சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டிருக்கும் 7ஆவது தளத்திற்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை விசாரணையை தொடங்க இருக்கும் நிலையில் சிறைத்துறை போலீசாரின் காவல் விலக்கிக் கொள்ளப்பட்டு ஏழாவது தளம் முழுவதும் மத்திய படை பாதுகாப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நுழைவு வாயில் மற்றும் தரைத்தள பகுதிகளில் காவலர்கள், ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, ஓட்டுனர், நடத்துனர் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

செந்தில் பாலாஜியை கைது செய்த நிலையில், நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி புதன்கிழமை பிற்பகலில் மருத்துவமனைக்கு நேரில் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்த பின்னர் வரும் 28 ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டிருக்கும் 7ஆவது தளத்திற்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்