தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  C. T. Ravi: தேசிய செயலாளர் பொறுப்பில் சிடி ரவி நீக்கம்.. அண்ணாமலை நண்பர் நீக்கம் ஏன்?

C. T. Ravi: தேசிய செயலாளர் பொறுப்பில் சிடி ரவி நீக்கம்.. அண்ணாமலை நண்பர் நீக்கம் ஏன்?

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 29, 2023 12:27 PM IST

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வெளியிட்ட இந்தப் பட்டியலில் 13 துணைத் தலைவர்கள், 9 பொதுச் செயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவை ஜேபி நட்டா மாற்றி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமித்ஷா அண்ணா மலையுடன் சி.டி.ரவி
அமித்ஷா அண்ணா மலையுடன் சி.டி.ரவி (Amit Shah Twitter)

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பராக இருந்த சி.டி.ரவி, பாஜக தேசிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் சி.டி.ரவி சரியாக செயல்படவில்லை என்று அக்கட்சியினர் மத்தியில் கருத்து இருந்ததாக கூறப்படும் சூழலில் சிடி ரவி நீக்கப்பட்டுள்ளார்.

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அனில் ஆண்டனி, முன்னாள் ஏஎம்யு துணைத் தலைவர் தாரிக் மன்சூர் உள்ளிட்டோர் பாஜகவின் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானா பாஜக முன்னாள் தலைவர் பண்டி சஞ்சய் குமார் தேசிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேசமயம்சி.டி. ரவி, திலீப் கோஷ், ராதா மோகன் அகர்வால், திலீப் சேத்தியா, ஹரிஷ் திவேதி, சுனில் தியோதர், வினோத் சோங்கர் போன்ற பாஜகவின் தேசியப் பொறுப்பாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வெளியிட்ட இந்தப் பட்டியலில் 13 துணைத் தலைவர்கள், 9 பொதுச் செயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவை ஜேபி நட்டா மாற்றி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தமிழக பொறுப்பாளராக வேறு ஒருவர் மாற்றப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்