தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அமித்ஷா பற்றி உதயநிதி பேசியதை நீக்குங்கள்! பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு

அமித்ஷா பற்றி உதயநிதி பேசியதை நீக்குங்கள்! பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு

Kathiravan V HT Tamil
Apr 13, 2023 12:29 PM IST

மத்திய உள்துறை அமைச்சர் பெயரை திரு என்றோ மாண்புமிகு என்றோ சொல்லாமல் அவர் அமித்ஷா மகனிடம் இருக்கிறது என்று சொன்னார். முதலமைச்சர் கூட எழுந்து அதில் திரு என்று உள்ளது அதில் ஒன்றும் தவறு இல்லை சொல்கிறார் - நயினார் நாகேந்திரன்.

வானதி சீனிவாசன் - நயினார் நாகேந்திரன் - எம்.ஆர்.காந்தி - சரஸ்வதி
வானதி சீனிவாசன் - நயினார் நாகேந்திரன் - எம்.ஆர்.காந்தி - சரஸ்வதி

ட்ரெண்டிங் செய்திகள்

மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் பேசும் போது ஐபிஎல் டிக்கெட்டை அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா வைத்திருக்கிறார் என்று கிண்டலாக பேசி உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் பெயரை திரு என்றோ மாண்புமிகு என்றோ சொல்லாமல் அவர் அமித்ஷா மகனிடம் இருக்கிறது என்று சொன்னார். முதலமைச்சர் கூட எழுந்து அதில் திரு என்று உள்ளது அதில் ஒன்றும் தவறு இல்லை சொல்கிறார்.

தமிழ்நாடு தலைவராக கௌதம சிகாமணிதான் உள்ளார் அவர் பெயரை சொல்லி இருக்கலாம். அவைக்குறிப்பில் இருந்து நீக்காததால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.

கோவை தெற்கு தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறுகையில், கோவை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததை சபாநாயகர் ஏற்கவில்லை. மேலும் சபையில் மாண்புமிகு உள்துறை அமித்ஷா மகன் குறித்தெல்லாம் தேவையில்லாமல் இங்கு இழுக்கிறார்கள். இதே போல் இவர்களை பற்றி மற்ற சட்டமன்றங்களில் பேசுவதற்கு தெரியாதா?

மாண்புமிகு முதலமைச்சர் இதனை நியாயப்படுத்துகிறார். மகன் என்பதால் அவருக்கு மகன் செய்யும் தவறுகள் எல்லாம் தெரியவில்லை, தவறு செய்தால் கண்டிக்க வேண்டுமே தவிர நியாயப்படுத்தக் கூடாது என்றார்.

நேற்று முன் தினம் நடந்த சட்டப்பேரவை விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஐபிஎல் பாஸ் கேட்ட அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி கேட்டார். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் “ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ அமைப்பு  நடத்துகிறது. இதற்கு தலைவர் உங்கள் நண்பர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா. நாங்கள் கேட்டால் கூட டிக்கெட் தரமாட்டார் ஆனால் நீங்கள் கேட்டால் டிக்கெட் தருவார்” என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.

IPL_Entry_Point