தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vet Doctor : கால்நடை மருத்துவம், பால்வள தொழில்நுட்ப படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்! மேலும் ஒரு கல்வி தகவல் உள்ளே!

Vet Doctor : கால்நடை மருத்துவம், பால்வள தொழில்நுட்ப படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்! மேலும் ஒரு கல்வி தகவல் உள்ளே!

Priyadarshini R HT Tamil
Jun 11, 2023 11:24 AM IST

Veterinary Doctor : பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் நாளை முதல் கால்நடை மருத்துவ படிப்புக்களுக்காக ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி – ஏஹெச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. எஞ்சிய 597 இடங்கள் தமிழகத்துக்கு உள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் பி.டெக் படிப்புகளில் உணவு தொழில்நுட்ப பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்ப பிரிவில் 20 இடங்கள் உள்ளன. இதில், உணவு தொழில்நுட்ப படிப்புக்கான 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) உள்ளன. எஞ்சியுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

இதேபோல, ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மை கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்ட படிப்புகளும் 4 ஆண்டுகள் படிக்க வேண்டும். இந்நிலையில், பிவிஎஸ்சி – ஏஹெச், பி.டெக். படிப்புகளுக்கு 2023-24ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வரும் 12ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் 30ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

வெளிநாடு வாழ் இந்தியர், அவர்களின் வாரிசுகள் மற்றும் நிதிஆதரவு பெற்றோர், வெளிநாட்டினருக்கான இடஒதுக்கீடு, விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இந்த படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பில் 45 இடங்கள், உணவு தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வள தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

அடுத்த செய்தி – எம்பிஏ நுழைவுத்தேர்வு எப்போது? 

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முதுநிலை படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், வணிகவியல் மற்றும் நிதிக் கல்வியியல் துறையில் நடத்தப்படும் எம்பிஏ (நிதியியல் மேலாண்மை) முதுகலைத் தொழிற் படிப்புக்கு மாணவ, மாணவியா் சோக்கைக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 20ம் தேதி காலை 11 மணிக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக, சூரியூா் வளாகத்தில் நடைபெறுகிறது.

நுழைவுத்தேர்வு குறித்த தகவல் கடிதம், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி, உரிய காலத்தில் விண்ணப்பித்தோருக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன. மேலும், வலைதளத்திலும் இத்தகவல்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. எனவே, தோவெழுதுவோா் ஜூன் 20ம் தேதி அடையாள அட்டையுடன் தேர்வில் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, வணிகவியில் மற்றும் நிதிக் கல்வியியல் துறைத் தலைவா் வனிதாவை 98418 42144 என்ற எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்புகொள்ளலாம். இத்தகவலை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளா் கணேசன் தெரிவித்தாா்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்