Jyothimani : பாஜகவிற்கு பயந்து அதிமுக விட்டு கொடுத்ததால் தான் அண்ணாமலை அதிக வாக்குகளை பெற முடிந்தது -ஜோதிமணி!-annamalai was able to get more votes only because aiadmk gave up fearing bjp says jyothimani - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Jyothimani : பாஜகவிற்கு பயந்து அதிமுக விட்டு கொடுத்ததால் தான் அண்ணாமலை அதிக வாக்குகளை பெற முடிந்தது -ஜோதிமணி!

Jyothimani : பாஜகவிற்கு பயந்து அதிமுக விட்டு கொடுத்ததால் தான் அண்ணாமலை அதிக வாக்குகளை பெற முடிந்தது -ஜோதிமணி!

Divya Sekar HT Tamil
Jun 07, 2024 06:26 PM IST

பாஜகவிற்கு பயந்து அதிமுக விட்டுக் கொடுத்ததால்தான் கோயம்புத்தூரில் அண்ணாமலை அதிக வாக்குகளை பெற முடிந்தது என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.

பாஜகவிற்கு பயந்து அதிமுக விட்டு கொடுத்ததால் தான் அண்ணாமலை அதிக வாக்குகளை பெற முடிந்தது -ஜோதிமணி!
பாஜகவிற்கு பயந்து அதிமுக விட்டு கொடுத்ததால் தான் அண்ணாமலை அதிக வாக்குகளை பெற முடிந்தது -ஜோதிமணி!

டெல்லியில் நடைபெற இருக்கும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கரூர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

ஜோதிமணி செய்தியாளர் சந்திப்பு

முன்னதாக ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில், ”பாஜகவிற்கு பயந்து அதிமுக விட்டுக் கொடுத்ததால்தான் கோயம்புத்தூரில் அண்ணாமலை அதிக வாக்குகளை பெற முடிந்தது,இந்த தேர்தலை பொருத்தவரையில் மக்கள் பாஜக நரேந்திர மோடி ஆட்சி அமைக்க கூடாது என்று தான் வாக்களித்துள்ளார்கள்.

நியாயமாக நரேந்திர மோடியும் பாஜகவும் ஆட்சி அமைக்ககூடாது தார்மீக அடிப்படையில் உண்மையான அரசியலை நரேந்திர மோடி இடம் இருந்து நாம் எதிர்பார்க்க முடியாது என்றார்.

இது மோடி ஆட்சி கிடையாது என்டிஏ ஆட்சி

தொடர்ந்து பேசிய அவர்,400 பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறுவோம் என தெரிவித்து வந்த நிலையில் 240 மட்டுமே பெற்றுள்ளனர். இது மோடி ஆட்சி கிடையாது என்டிஏ ஆட்சி. நரேந்திர மோடியின் மக்கள் விரோத செயல்பாடுகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளோம் அதனால் தான் நரேந்திர மோடிக்கு எதிராக இந்த தீர்ப்பானது அமைந்துள்ளது.

நாங்கள் மீண்டும் ஒரு சிறப்பான எதிர்கட்சியாக செயல்படுவோம் பங்குச்சந்தையின் ஊழலை எங்கள் தலைவர் வெளிப்படுத்தியுள்ளார். அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக நாங்கள் பேசிக் கொண்டிருப்போம்.

ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று தான் இந்தியா கூட்டணியின் தலைவர்களும் காங்கிரஸ் கட்சியும் விரும்புகிறது.

இந்தியா கூட்டணியும் மகத்தான வெற்றி

அது சம்பந்தமாக கூட்டத்தில் முடிவெடுப்பார்கள். நேற்று கோயம்புத்தூரில் அதிமுகவின் வேலுமணி கூறியதையும் அதற்கான பாஜக அண்ணாமலையின் பதிலையும் பார்த்தேன். இந்த வார்த்தை போரானது ஒரு நாடகம் பாரதிய ஜனதா கட்சியின் அழுத்தத்திற்கு பயந்து அதிமுகவும் வேலுமணியும் களத்தை பாஜகவிற்கும் அண்ணாமலைக்கும் விட்டுக் கொடுத்தார்கள். 

அதனால் தான் பாஜகவும் அண்ணாமலையும் அதிகப்படியான வாக்குகளை பெற முடிந்தது.அதை மறைத்து அதிமுக தொண்டர்களை ஏமாற்றுவதற்காக வேலுமணியும் அண்ணாமலையும் இந்த நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள்.

பாஜக அதிமுக மறைமுக கூட்டணியை மீறிதான் திராவிட முன்னேற்றக் கழகமும் இந்தியா கூட்டணியும் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் வாக்கு வங்கி என்பது அதிமுகவின் மூலம் கிடைக்கப்பெற்றது தான்” என கூறினார்.

கோவையில் அண்ணாமலை தோல்வி

கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  அவர் 5,68, 200 வாக்குகளை பெற்றார். இரண்டாவது இடத்தை பிடித்த அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்றார். அதிமுக மூன்றாவது இடத்தை பிடித்த நிலையில், அதன் வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன் 2, 36, 490 வாக்குகள் பெற்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.