Trichy Surya: ’நீங்க இருந்த போது கட்சில சேர கூட ஆள் இல்ல! ஏன் புலம்புரீங்க!’ தமிழிசையை விளாசும் திருச்சி சூர்யா!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Trichy Surya: ’நீங்க இருந்த போது கட்சில சேர கூட ஆள் இல்ல! ஏன் புலம்புரீங்க!’ தமிழிசையை விளாசும் திருச்சி சூர்யா!

Trichy Surya: ’நீங்க இருந்த போது கட்சில சேர கூட ஆள் இல்ல! ஏன் புலம்புரீங்க!’ தமிழிசையை விளாசும் திருச்சி சூர்யா!

Kathiravan V HT Tamil
Jun 09, 2024 12:42 PM IST

Tamilisai Vs Annamalai: பாஜகவுக்குள் தேர்தல் நிதிகள் சரியாக போய் சேரவில்லை என்ற பொதுத்தளத்தில் நீங்கள் பேசிய பிறகுதான் இன்று தமிழ்நாடு முழுவதும் அது பேசும் பொருளாக ஆகியது இது கட்சி கட்டுப்பாடா? என திருச்சி சூர்யா சிவா கேள்வி

’நீங்க இருந்த போது கட்சில சேர கூட ஆள் இல்ல! ஏன் புலம்புரீங்க!’ தமிழிசையை விளாசும் திருச்சி சூர்யா!
’நீங்க இருந்த போது கட்சில சேர கூட ஆள் இல்ல! ஏன் புலம்புரீங்க!’ தமிழிசையை விளாசும் திருச்சி சூர்யா!

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர். 

அண்ணாமலையை விமர்சித்த தமிழிசை 

இந்த நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன்

அதிமுக உடன் கூட்டணி வைத்து இருந்தால், திமுகவுக்கு இத்தனை இடங்கள் கிடைத்து இருக்காது என்பது கணக்கு ரீதியாக உண்மை. அதிமுக, பாஜக கூட்டணி எடுத்த வாக்குகளை கூட்டினால் திமுகவை விட அதிகமாக வந்து இருக்கும். 

கூட்டணி என்பது ஒரு அரசியல் வியூகம்தான், முழுமையாக கூட்டணியை தவிர்க்க வேண்டும் என்ற கருத்து அல்ல, தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து அகில பாரத தலைமைதான் முடிவு எடுக்க முடியும் என கூறி இருந்தார்.  

மேலும், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்த தமிழிசை சவுந்தராஜன், “நான் கட்சியில் இருக்கும் போது சில அளவுகோலை வைத்து இருந்தேன். சமூகவிரோதிகள் போல் இருந்தால் அவர்களை ஊக்குவிக்கமாட்டேன். சமீபகாலத்தில் சமூகத்தில் நிறைய குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அதை தவிர்த்து கட்சியில் கடுமையாக உழைக்க கூடிய தொண்டர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்” என்றும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கருத்துகளுக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரும், மாநில ஓபிசி பிரிவு பொதுச்செயலாளருமான திருச்சி சூர்யா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ’எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் இது தொடர்பாக ட்வீட் செய்து இருந்த அவர், 

ஊடகங்களில் பதிவிடுவது சரியா?

தேசியத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற பாடம் எடுக்கக்கூடிய தாங்கள் ஒரு முன்னாள் மாநிலத் தலைவர் பொது ஊடகங்களில் இப்படி கருத்து பதிவிடுவது சரியா?

குற்ற பின்னணி உள்ளவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்க்கப்பட்டது என்பது தங்களுடைய பரிந்துரையில் மாநிலத் தலைவர் ஆக்கப்பட்ட எல்.முருகன் காலகட்டத்தில்தான் வேண்டுமென்றால் நான் பட்டியல் தருகிறேன்.

நீங்கள் இருந்தபோது கட்சியில் சேர ஆட்கள் வரவில்லை 

கட்சியின் வளர்ச்சியையும் தனி நபருக்கு கிடைக்கும் புகழையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி புலம்புகிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது தாங்கள் மாநில தலைவராக இருந்தபோது கட்சியில் சேர்வதற்கு கூட ஆட்கள் முன்வரவில்லை என்பதே நிதர்சனம்.

அதிமுக கூட்டணி இருந்திருந்தால் அதிகம் இடங்கள் ஜெயித்திருக்கும் என்று தேசியத்தின் முடிவுக்கு எதிரான உங்கள் கருத்து கட்சி கட்டுப்பாடா?

பாஜகவுக்குள் தேர்தல் நிதிகள் சரியாக போய் சேரவில்லை என்ற பொதுத்தளத்தில் நீங்கள் பேசிய பிறகுதான் இன்று தமிழ்நாடு முழுவதும் அது பேசும் பொருளாக ஆகியது இது கட்சி கட்டுப்பாடா?

நடவடிக்கைகளை சந்திக்க தயார்

இப்படி எல்லாம் கட்டுப்படாத முன்னால் மாநிலத் தலைவரின் கருத்திற்கு அமைதி காக்கும் தேசியம் அதற்கு எதிர் வினையாற்றும் எங்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதை சந்திக்க தயாராக உள்ளோம்.

பதவிக்காக நாங்கள் இந்த கட்சியில் இல்லை அண்ணனின் அன்புக்காக மட்டுமே உள்ளோம் என பதிவிட்டு உள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.